ஆனால், இந்தக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவு இறுதியாகவில்லை. எனவே, சுமார் 10 தொகுதிகளில் மகாபந்தன் கூட்டணிக் கட்சிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. அதனால் கூட்டணிக் குழப்பம் நீடித்தது.
கூட்டணி சிக்கல்
இதற்கிடையில், மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் நேற்று (22-ம் தேதி) பாட்னாவில் மகாபந்தன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து மத்தியஸ்தம் செய்தார்.
ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோரையும் சந்தித்தார். மேலும், ஆர்.ஜே.டி போட்டியிடும் தொகுதிகளில் மகாபந்தன் கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்களை வாபஸ் வாங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

காங்கிரஸ் முடிவு
மகாபந்தன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட், “கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நல்ல முறையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
நாங்கள் விரிவான கலந்துரையாடலை நடத்தினோம். மாபெரும் கட்சிகள் இணையும் ஒரு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் சில சிக்கல்கள் எழுவது சாதாரணமானது.
23-ம் தேதி (இன்று) ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் எல்லாம் தெளிவுபடுத்தப்படும். மகாபந்தன் கூட்டணியில் எந்த சர்ச்சைகளும் இல்லை.” என்றார்.