இதற்கிடையில், பிரதமர் மோடியுடன் தொலை பேசியில் பேசியதாகக் கூறிய அதிபர் ட்ரம்ப், “இந்தியவுடன் பேசியிருக்கிறேன். இந்தியா தனது ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தும் என்று பிரதமர் மோடி எனக்கு உறுதியளித்திருக்கிறார்” என்றார்.
ஆனால், இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் அந்தக் கூற்றை நிராகரித்து, “அன்று தலைவர்களுக்கு இடையேயான எந்த தொலைபேசி உரையாடலும் நடந்ததாக எங்களுக்குத் தெரியவில்லை.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், “இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை பாதியாகக் குறைத்துள்ளதாகக் கூறினார்.
அப்படி எதுவும் இந்தியா குறைக்கவில்லை’ எனக் கூறியது. இந்த நிலையிதான் அதிபர் ட்ரம்ப் ,“ இந்தியா தனது விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டு அதன் கொள்முதலை நிறுத்தாவிட்டால் இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிப்பேம்” என பகிரங்கமாக மீண்டும் மிரட்டியிருக்கிறார்.