latest

‘என்னுடைய வீரியத்தை நீ பார்ப்பாய் ‘ பெண் அதிகாரியை நாய், சங்கி என அவதூறாக பேசிய விசிக மா.செ.மீது வழக்கு! | VCK executive speaks disrespectfully of Kanyakumari District Pollution Control Board female officer

[ad_1]

அந்த சீட்டில் இருந்து நீ சஸ்பெண்ட் செய்யப்படுவாய். அதற்கான வேலைகளை விடுதலை சிறுத்தைகளும் அந்த நிறுவனமும் எடுக்கும். முறையான சில அனுமதிகள் அங்கு இல்லை; அதற்கான நடவடிக்கைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. அதற்காக அந்த கம்பெனியை மூடிவிடுவாயா? உனக்கு தெம்பு இருந்தால், நாணம் இருந்தால் என்மீது மானநஷ்ட வழக்கு போடு.”

இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

வி.சி.க மாவட்டச் செயலாளர் அல்காலித்

வி.சி.க மாவட்டச் செயலாளர் அல்காலித்

பெண் அதிகாரியை “நாய்” எனவும் “சங்கி” எனவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசியதாக, அதிகாரி பாரதி வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், பேக்கரி உரிமையாளர் முகமது இஸ்மாயிலின் தூண்டுதலின் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் மற்றும் மணவை கண்ணன் ஆகியோர் சிலருடன் போராட்டம் நடத்தி, தன்னை அவதூறாகப் பேசி, அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறியிருந்தார்.

இது தொடர்பாக வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு, பெண் அதிகாரி பாரதியின் புகாரின் பேரில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் அல்காலித், மணவை கண்ணன் மற்றும் பேக்கரி உரிமையாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *