latest

"கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் நான் அழுதது நாடகமா?" – அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்


கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

சம்பவம் நடந்த இரவு பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், “படிச்சு படிச்சு சொன்னோமே, கண்டிஷன பாலோ பண்ணுங்க, கண்டிஷன பாலோ பண்ணுங்கனு” என்று அழுத வீடியோ பெரும் வைரலாகி இருந்தது. இதை எதிர்க்கட்சியினர் பலரும் நாடகம் என்று விமர்சித்திருந்தனர்.

அமைச்சர் அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்

“ஆளாக்கிவிட்ட தந்தையை கொச்சைப்படுத்துபவரைப் பொருட்படுத்த வேண்டாம்” – அன்புமணி மீது அன்பில் அட்டாக்

பாமக தலைவர் அன்புமணி, “அமைச்சர் தேம்பித் தேம்பி அழுகிறார். அவருக்கு ஆஸ்கர் விருது வழங்க வேண்டுமென ஆஸ்கர் நிறுவனத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இதற்கு அன்பில் மகேஸ், “அவர்களை என்னுள் ஒருவராகக் கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராகக் கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்; வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையைக் கூட கொச்சைப்படுத்துபவர்களின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன்” என்று பதிலளித்திருந்தார்.

அமைச்சர் அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்

இந்நிலையில் தற்போது இந்த விமர்சனம் குறித்துப் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “உணர்ச்சிகளும், அறிவும் சேர்ந்த ஒருவன்தான் மனிதன். உணர்ச்சிகள் அதிகமாகி, அறிவு குன்றிப்போய் இருந்தால் அது விலங்குக்குச் சமமானது, அறிவு அதிகமாகி உணர்ச்சி இல்லாமல் போனால் அது மரத்திற்குச் சமமானது எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.

‘உணர்வார் அறிந்து செயல்வார்கள் மற்றையார்
உணர்வாரை உள்ளிப் படும்’ — திருக்குறள்

இந்தத் திருக்குறளைத்தான் நான் பதிலாக மேற்கொள் காட்ட விரும்புகிறேன். முதலில் நாமெல்லாம் மனிதர்கள். பாதிப்பு ஏற்பட்டால் மனம் கலங்குவது மனிதனின் குணம்” என்று பதிலளித்துப் பேசியிருக்கிறார் அன்பில்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *