கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப் பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
இந்தக் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்தான் தமிழக அரசியலில் பெரும் பேசிபொருளாகி வருகிறது. இது குறித்து பலரும் பல்வேறு கருத்துகள் தெரிவித்த வண்ணமிருக்கின்றனர்.
இது குறித்து விஜய்யை விமர்சித்துப் பேசியிருக்கும் கருணாஸ் “கரூர் கூட்ட நெரிசல் அசம்பாவிதம் நடந்த அந்த நள்ளிரவே விஜய் களத்தில் நின்றிருக்க வேண்டும். அன்று அங்கிருந்து ஓடியது தவறானது.