latest

    கரூர் செல்ல சட்ட அனுமதி கோரியிருப்பதை உறுதி செய்தார் விஜய் | Karur Stampede: 39 Families Receive ₹20 Lakh Aid from Vijay’s Party, Leader Promises Visit Soon


    கடிதத்தில் விஜய் கூறியிருப்பதாவது, “கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்தச் சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    தவெக விஜய் கடிதம்

    தவெக விஜய் கடிதம்

    சென்ற வாரம் உங்களுடனான நம் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள மேற்கொண்ட காணொளி அழைப்பில் நாம் சொன்னது போலவே, நமது சந்திப்பிற்காக, அதற்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம்.

    இதனிடையே, நாம் ஏற்கனவே (28.9.2025 அன்று) அறிவித்தபடி குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சத்தை வங்கியின் RTGS வழியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக (18.10.2025) அனுப்பி வைத்துள்ளோம். அதை நமது உதவிக் கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம்”.


    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *