“2026 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா?” என்ற கேள்விக்கு? “யாருக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும். இருந்த போதும், விருதுநகர் காமராஜர் பிறந்த மண் என்பதால், இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எடுத்துரைக்கும்” என்றார்.

“விருதுநகர் தி.மு.க கைவசம் உள்ளது. ஒரே மாவட்டத்தில் இரு தொகுதிகளை காங்கிரஸ் கேட்குமா?” என்ற கேள்விக்கு “எல்லாருக்கும் எல்லாத் தொகுதியிலும் போட்டியிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். எண்ணிக்கைகள் முடிவு செய்த பின்பே இடங்கள் முடிவு செய்யப்படும்”. என்றார்.
“பீகாரில் இந்தியா கூட்டணியில் தேர்தல் உடன்பாடு ஏற்படவில்லையே?” என்ற கேள்விக்கு, “இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளை பிரிப்பதில் தான் பிரச்னைகள் உள்ளன. கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசி ஓரிரு நாட்களில் சுமூக முடிவு எட்டப்படும்” எனத் தெரிவித்தார்.
“இந்தியா கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும், விட்டுக் கொடுப்பதிலும் காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பு இல்லையா?” என்ற கேள்விக்கு, “அனைத்துக் கட்சிகளுக்கு பொறுப்பு உள்ளது. கூட்டணியில் விட்டுக் கொடுப்பது மட்டும் காங்கிரசின் வேலையாக இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை வாங்கிக் கொண்டு அமைச்சராக இருக்கலாம் என எந்தக் கட்சி நினைத்தாலும் அது நடக்காது. ஹரியானா, டெல்லியில் பலமுறை ஆம் ஆத்மியுடன் பலகட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி நடத்தியது. ஆனால், அவர்கள் உடன்படவில்லை. இதனால் ஆட்சியை இழந்தனர். தற்போது அவர் டெல்லியில் குடியிருக்க முடியவில்லை.”
`இது தமிழ்நாட்டிற்கு பொருந்துமா?’ என்ற கேள்விக்கு? “காங்கிரஸ் கட்சியை மதித்தால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பிரச்சாரத்திற்கு வருவார்கள். வெற்றி பெற அனைவரும் பாடுபடுவோம். காங்கிரஸ் கட்சியை மதிக்கவில்லையென்றால் முதலமைச்சராக வர முடியாது. மதித்தால் முதலமைச்சராக வர முடியும். இல்லையென்றால் முன்னாள் முதல்வராகவே இருக்க முடியும்.” என தெரிவித்தார்.