சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகளை முறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை வகுக்குகுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவேற்றம் என்பது வணிகமயமாகி அதனால் மாற்றுத்திறனாலிகள், பெண்கள், குழந்தைகள், முதியோர், சிறுபான்மையினர் என பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவது அதிகரிப்பதையும் கண்டித்த உச்ச நீதிமன்றம் இது குறித்து கவலையும் தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முதுகெலும்பு தசை சிதைவு பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் பாா்வை குறைபாடு உடையவா்கள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக சமய் ரெய்னா, விபுல் கோயல், பால்ராஜ் பரம்ஜீத் சிங் காய், சோனாலி தாக்கா் (எ) சோனாலி ஆதித்யா தேசாய், நிசாந்த் ஜகதீஷ் தன்வா் ஆகியோா் மீது உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில், மேற்கண்ட 5 யூடியூபா்களும் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்கவும், அவா்களுக்கு அபராதமும் விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத்தொடர்ந்து, இதுபோன்ற சமூக ஊடக பதிவுகள் முறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை வகுத்து, அதன் விவரத்தை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்குமாறும், செய்தி ஒளிபரப்பு தர நிர்வாக அமைப்பான என்.பி.எஸ்.ஏ. உடன் கலந்தாலோசித்து உரிய வழிகாட்டுதல்களை வகுக்குகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
@-தினப்புயல்