latest

சமூக பொறுப்பற்ற இன்ஃப்ளூயன்சர்களால் படுகை அணைகளில் குவிந்த மக்கள்! – களமிறங்கிய புதுச்சேரி ஆட்சியர் | Puducherry Collector Praised for Preventing People from Bathing in Dams

[ad_1]

இத்தனைக்கும் `வீடூர் அணை திறக்கப்பட்டிருப்பதால் சங்கராபரணி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது’ என்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் விடுத்த எச்சரிக்கையை பொதுமக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

கடந்த 2021-ம் ஆண்டு பெய்த பருவ மழையில் சங்கராபரணி ஆற்றின் செல்லிப்பட்டு தடுப்பணையில் தனது பெற்றோருடன் குளிக்கச் சென்ற சபியுல்லா என்ற 12 வயது சிறுவன், ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

அதேபோல கடந்த 2024-ம் ஆண்டு தன்னுடைய பெற்றோர்களுடன் குளிக்கச் சென்ற லியோ ஆதித்யன் என்ற 16 வயது சிறுவன், நீரில் அடித்துச் செல்லப்பட்டான். அதன்பிறகு காவல் மற்றும் தீயணைப்புத் துறையினரின் தீவிர தேடுதலால், நான்கு நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன்

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன்

இப்படியான சூழலில்தான் படுகை அணைகளை குற்றால அருவி போல வர்ணித்து ரீல்ஸ் போடும் இன்ஃப்ளூயன்சர்கள் கொடுக்கும் ஹைப்களால், மக்கள் குடும்பத்துடன் அங்கு படையெடுத்தனர். அதனால் ஆபத்தை உணராமல் தடுப்பணைகளில் மக்கள் குளிப்பது குறித்து, ஜூ.வி சார்பில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம்.

அதனடிப்படையில் உடனே களத்தில் இறங்கிய ஆட்சியர், போலீஸார் மூலம் படுகை அணைகளுக்குச் செல்லும் வழிகளில் பேரிகார்டுகள் அமைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

அத்துடன் சங்கராபரணி ஆறு மற்றும் படுகை அணைகளில் பொதுமக்கள் இறங்காதவாறு போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறார். ஆட்சியரின் துரித நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *