கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி, உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் அழைத்து ஆறுதல் கூற திட்டமிட்டிருந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து விஜய்யை சந்திக்க வைக்க தவெக கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் குறித்துப் பேசியிருக்கும் கருணாஸ், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் நடிகர்களாக இருந்து புகழ்பெற்று அரசியலுக்கு வந்து சாதித்தவர்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
