latest

`சிறை புகைப்படங்கள் பெல்ஜிய கோர்ட்டில் தாக்கல்’ – நாடு கடத்தப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்சி? | Mumbai jail ready with TV, Western toilet facility for diamond merchant Mehul Choksi,


இது தவிர ஆறு மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. சிறை அறைக்கு வெளியில் நடைபயிற்சிக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 46 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள இந்த சிறப்பு சிறைப்பிரிவில் இரண்டு அறைகள் இருக்கின்றன. சிறை எண் 12ல் அமைந்துள்ள இந்த சிறப்பு அறைகளில் வாஷ் பேஷன் வசதி கூட செய்யப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்படும் கைதிகள் மருத்துவ காரணங்கள் அல்லது கோர்ட் விசாரணைக்கு மட்டுமே அந்த சிறையில் இருந்து வெளியில் வருவார்கள். அவர் நடைபயிற்சி மேற்கொள்வதாக இருந்தாலும் அவரது சிறை அறைக்கு வெளியில் இதற்காக வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிறை புகைப்படங்கள் அனைத்தும் பெல்ஜிய கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மெஹுல் சோக்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்திய சிறைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், நியாயமான விசாரணை நடைபெறுவதில்லை என்றும் வாதிடப்பட்டது.

அவரது வாதத்தை நிராகரித்த நீதிமன்றம் பெரிய மோசடி வழக்குகள் குறித்த செய்திகளை ஊடகங்களில் வெளியிடுவது இயற்கையானது என்றும், இது நியாயமான விசாரணை உரிமைகளை மீறாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்தியாவில் சித்திரவதை, நியாயமற்ற விசாரணை அல்லது மருத்துவ உதவி மறுப்பு போன்றவற்றைச் சந்திக்க நேரிடும் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் சோக்ஸி முன்வைக்கத் தவறிவிட்டதையும் கோர்ட் சுட்டிக்காட்டியது.

மெஹுல் சோக்சியின் உரிமைகள், உடல் நலம் பாதுகாக்கப்படும் என்று இந்திய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. நாட்டின் முக்கிய நகரங்களில் அல்லது மாநிலத்திற்கு ஒரு நகரத்தில் சர்வதேச தரத்தில் ஒரு சிறை அறை கட்டப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கில் பிரதான குற்றவாளியாக கருதப்படும் நீரவ் மோடி தற்போது லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், தொடர்ந்து நீரவ் மோடி ஒவ்வொரு கோர்ட்டிலும் தொடர்ந்து மேல்முறையீடு செய்து கொண்டிருக்கிறார். அவர் நாடு கடத்தப்பட்டால் மெஹுல் சோக்சி அறைக்கு அருகில் உள்ள அறையில் அடைக்கப்படுவார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *