latest

சென்னை: 5-ம் வகுப்பு சிறுமியை அடித்த ஆசிரியர்; காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் | Chennai: Teacher beats up 5th grade girl for spilling ink; Congress President Selva Perunthagai condemns

[ad_1]

சென்னை புழுதிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பேனா மை சிந்தியதற்காக ஐந்தாம் வகுப்பு சிறுமி ஒருவரை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலையில் அடித்துள்ளார். இதனால் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அந்தச் சிறுமி கடந்த 20 நாள்களாகச் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம்
சித்தரிப்புப் படம்

“சென்னை புழுதிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் மனித நேயத்தையும், கல்வி நிலையங்களின் அடிப்படை ஒழுங்கையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பேனா மை சிந்தியதற்காக ஒரு ஐந்தாம் வகுப்பு சிறுமியை தலையில் அடித்து ரத்தக் கசிவுடன் காயமடைந்து 20 நாட்களாகச் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகிய செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.

குழந்தைகள் கல்வி பெறும் இடம் என்றால் அது அன்பும், நம்பிக்கையும், பாதுகாப்பும் நிறைந்த ஆலயம் ஆக இருக்க வேண்டும்.

ஆனால், ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரே இத்தகைய கொடுமையான செயலைச் செய்திருப்பது நம் சமூகத்தின் கல்வி பண்பைக் களங்கப்படுத்துகிறது.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *