ஓ.பி.எஸ்-ஸுக்குப் போக்கிடம் இல்லை!
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “ஓ.பி.எஸ், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் இருந்தவர். இப்போது தனக்குத் தலைமை பதவி வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்தச் சூழலில், ‘அ.தி.மு.க கூட்டணி வலிமையாக இல்லை. எனவே தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது’ என்று ஓ.பி.எஸ் சொல்வது மிகவும் தவறு.
நடுநிலையாளர்கள் அல்லது தி.மு.க-வினர் இவ்வாறு பேசலாம். ஆளும் கட்சி நல்ல திட்டம் அறிவித்தால்கூட, எதிர்க்கட்சி அதில் குறையிருக்கிறது என்று விமர்சிப்பதுதான் அரசியல். அரசியல்வாதியாக அவருக்குப் போக்கிடம் இல்லாத சூழல் உள்ளது.
அதேநேரத்தில், எடப்பாடியை வீழ்த்த வேண்டும் என ஓ.பி.எஸ் நினைக்கிறார். அதற்காக ஓ.பி.எஸ்-ஸும், டி.டி.வி தினகரனும் இணைந்து தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. அதன் ஒருபகுதியாகக் கூட அவர் இப்படிப் பேசியிருக்கலாம். ஆனாலும் அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
ஓ.பி.எஸ்-ஸின் பேச்சு, நடவடிக்கை, அறிவித்து நடைபெறாத மாநாடு, தற்போதைய பேட்டியென ஒவ்வொரு நகர்வும் அவரது குழப்பமான அரசியல் வியூகத்தை தெளிவாகப் பிரதிபலிக்கின்றன!
