மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் எம்.பி. ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“கரூர் மாநகராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தாமல் உள்ளனர். அதை சரி செய்ய சொல்லி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் SIR செயல்படுத்தவில்லை.

SIR நடவடிக்கை என்பது, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்கும் செயல். பா.ஜ.க-வும், தேர்தல் கமிசனும் சேர்ந்து நடத்தும் ஊழலிலேயே தேர்தல் முடிவு தெரிந்து விடுகிறது.
அசாமில் SIR நடத்தாத நிலையில், தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களில் மட்டும் ஏன் நடத்த வேண்டும்?. அதிமுக SIR வருவதற்காக காத்திருந்தது போலவே, வந்தவுடன் ஆதரிக்கின்றனர். பா.ஜ.க-வின் பிடியில் அழிவில் இருக்கும் அ.தி.மு.க, இந்த துரோகத்திற்கு துணை போகக்கூடாது. முதல்வர் அழைப்பு விடுத்துள்ள SIR -க்கு எதிரான கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவாக இருக்க வேண்டும்” என்றார்.
