latest

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில் ரூ. 888 கோடி லஞ்ச ஊழல் | DMK and Minister Thiru KN Nehru’s brother’s 888 crore ‘JOB RACKET ‘𝐒𝐜𝐚𝐦


நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில் ரூ. 888 கோடி லஞ்ச ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் கே.என். நேரு மீது பெரும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 2,538 பணி நியமனத்தில் தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ. 888 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் நிறுவனத்தின் வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத் துறை நடத்திய ரெய்டின் போது இது தெரியவந்துள்ளது.

பாஜக மற்றும் அதிமுகவினர் “நீதித்துறை மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தி, அமைச்சர் கே.என் நேரு மற்றும் திமுகவின் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதற்கு அமைச்சர் கே.என். நேரு, “2012, 2013, 2014, 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு பதவிகளுக்கு இதே அண்ணா பல்கலைக்கழகம் மூலமாகத் தான் தேர்வுகள் நடத்தப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதே அண்ணா பல்கலைக்கழகம் மூலமாகத்தான் இந்த பணிநியமமும் நடந்திருக்கிறது.

கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வுகளில் மட்டும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள் தலையிட்டதால் தவறுகள் நிகழ்ந்துள்ளன என்ற குற்றச்சாட்டு பொய்யானது. திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற அரசியல் உள்நோக்கத்தோடு இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது” என்று விளக்கமளித்திருக்கிறார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *