இந்த பந்த்திற்கு “BC JAC’ கூட்டமைப்பு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அம்மாநில துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, பொது மக்களும் அனைத்து சமூகம் சார்ந்தவர்களும் பந்த்-இல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த பந்த்தில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள், நாடகம், பேருந்து போக்குவரத்து உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கின்றன. RTC பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.
மருந்தகங்கள், மருத்துவனமனைகள் போன்ற அத்யாவசிய சேவைகள் மட்டும் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகை சமயத்தில் இதுபோன்ற பந்த் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம், இருப்பினும் இட ஒதுக்கீடுதான் முக்கியம் என மாநிலம் முழுவதும் பந்த் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெறும் தெலங்கானா அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த 42 சதவீத ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது