latest

    பைசன்: "மாரி(மழை) வந்துகொண்டிருக்கும் போது மாரி செல்வராஜுக்கு என்னங்க பாராட்டு?" – தமிழிசை கேள்வி


    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான ‘பைசன்’ திரைப்படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளை மீறி, தடைகளை உடைத்து சாதிக்கும் இளைஞரின் ஸ்போர்ட்ஸ் திரைப்படமான இப்படத்தை அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    அவ்வகையில் முதல்வர் ஸ்டாலின் ‘பைசன்’ படத்தைப் பார்த்துவிட்டு, “மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!” என்று நேரில் அழைத்து மரியாதை செய்து பாராட்டியிருந்தார்.

    இந்நிலையில் மழைக்காலத்தில் மக்கள் பணியைவிட்டுவிட்டு சினிமா பார்ப்பதாக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ஸ்டாலினை எக்ஸ் தளத்தில் விமர்சித்திருந்தார்.

    இதுகுறித்து இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் தமிழிசை செளந்தரராஜன், “முதல்வர் ஸ்டாலினின் செயல் மிகுந்த வேதனைக்குரியது. அவருடைய சன்(son) துணை முதல்வராக்கிவிட்டார், விவசாயிகள் சன் (son) பத்தி கவலையில்லை, அதுனால ஸ்டாலின் ‘பைசன்’ பார்த்துக் கொண்டிருக்கிறார். மக்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றால் மழையில் அவர்களிடைய சன் (sun) உதய சூரியன் காணாமல் போய்விடும்.

    மாரி (மழை) வந்துகொண்டிருக்கும்போது மாரி செல்வராஜுக்கு என்னங்க பாராட்டு?

     தமிழிசை சௌந்தரராஜன்
    தமிழிசை சௌந்தரராஜன்

    அதிமுக அமிஷ்ஷாவிற்கு அடிமையாக இருக்கிறது என்கிறார்கள். அப்படியென்றால் திமுக, ராகுல் காந்திக்கு அடிமையாக இருக்கிறது என்று கூறலாமா? பாஜக – அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. அதற்காக அடிமை என்றெல்லாம் சொல்வது அவதூறானது.

    இந்த மக்களுக்கு எதிரான ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். மக்களைக் கண்டுகொள்ளாத ஆட்சி விரைவில் தூக்கி எறியப்படும்” என்று விமர்சித்துப் பேசியிருக்கிறார் தமிழிசை செளந்தரராஜன்.




    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *