வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. இந்தப் பேரணி இன்று (ஆக. 26) 10வது நாளை எட்டியுள்ளது.
பிகாரின் மதுபானி பகுதியில் தொண்டர்கள் மத்தியில் இன்று (ஆக. 26) ராகுல் காந்தி பேசியதாவது,
”நான் பொய் கூறவில்லை. என் முன்னால் இருக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே வாக்குத்திருட்டில் பாஜக ஈடுபடுகிறது எனக் கூறுகிறேன். அடுத்த 40 – 50 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சியில் இருக்கும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா எங்குச் சென்றாலும் கூறி வருகிறார். இது என்னை சிந்திக்கவைத்தது. அடுத்த 40 -50 ஆண்டுகளுக்கு அதிகாரத்தில் இருப்போம் என்பது அவருக்கு எப்படித் தெரியும்? இது ஒரு விசித்திரமான கூற்று.
உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜக வாக்குத்திருட்டில் ஈடுபட்டுள்ளது என்பது நாட்டு மக்கள் முன்பு உடைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குத்திருட்டு ஆரம்பமானது குஜராத்தில்தான் என்பது ஒருநாள் வெளிப்படும். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் இது மற்ற மாநிலங்களிலும் பரவலானது.
மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா தேர்தலின்போது, வாக்குப்பதிவு தேதியை அவர்கள் மாற்றினார்கள். நான் மோடியுடன் அமர்ந்திருந்தேன். அவர்கள் பாணியில், மோடி தேர்வு செய்பவரே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர அவர்கள் அமர வைத்தனர். அவரால் எதையுமே அங்கு செய்யமுடியாது என்ற நிலையை உருவாக்கினர்.
@-தினப்புயல்