உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா புதுப்பிப்பு

'மாவட்டச் செயலாளரா… வி.எஸ் பாபுவின் மகனா?' – கொளத்தூரில் யாரை நிறுத்தப் போகிறார் விஜய்?

தினப்புயல் • • இப்போதே • சுமார் 1 நிமிடம்
'மாவட்டச் செயலாளரா… வி.எஸ் பாபுவின் மகனா?' – கொளத்தூரில் யாரை நிறுத்தப் போகிறார் விஜய்?
வாசிப்பு
Facebook Telegram

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமாகி சில நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இடைத்தேர்தலுக்கு முதல்வர் விஜய் யாரை வேட்பாளராக நிறுத்தப்போகிறார் எனும் பேச்சு பனையூர் முகாமில் எழத் தொடங்கியிருக்கிறது.

.

கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு கிட்டத்தட்ட 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார். இதைத்தொடர்ந்து வி.எஸ்.பாபு தமிழகம் அறிந்த முகமாகவும் முதல்வர் விஜய்க்கு பிடித்தமானவராகவும் மாறினார்.

.

இந்நிலையில்தான், 72 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வி.எஸ்.பாபு கடந்த நவம்பர் 19 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். அவரின் இறுதிச்சடங்கிலும் முதல்வர் முழுமையாக கலந்து கொண்டிருந்தார். பாபுவுக்காக தவெக சார்பில் ஒரு வாரம் துக்கமும் அனுசரிக்கப்பட்டு வரும் இந்த சூழலிலேயே கொளத்தூர் வேட்பாளர் யார் எனும் பேச்சு பனையூரில் எழத் தொடங்கியிருக்கிறது.

.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தவெகவின் சீனியர்கள் சிலர், 'பொதுத்தேர்தலின் போது கொளத்தூரில் ஒரு பேருந்து நிறுவன உரிமையாளரே நிற்க நினைத்தார். தலைமையும் அவருக்கு க்ரீன் சிக்னல் காட்டியிருந்தது. அதனால் அவரும் கட்சிக்காக கொஞ்சம் பணத்தை இறக்கினார். ஆனால், கடைசி நிமிடத்தில் ஸ்டாலினுக்கு எதிராக அனுபவசாலியை நிறுத்த வேண்டும் என்பதாலும், உள்ளடி வேலைகளாலும் வி.எஸ்.பாபுவுக்கு கொளத்தூர் கொடுக்கப்பட்டுவிட்டது.

இப்போது பாபு இல்லை. இடைத்தேர்தலில் அந்த பேருந்து நிறுவன உரிமையாளரையே நிறுத்தலாம் என ஒரு தரப்பு யோசிக்கிறது. ஆனால், சமீபத்தில் நிகழ்ந்த ஒரு பண மோசடி வழக்கில் அந்த நபருக்கு தொடர்பு இருப்பது போல சர்ச்சை எழுந்திருக்கிறது. அதனால் முதல்வர் அவரின் பெயரை டிக் அடிக்க வாய்ப்பில்லை.

.

இவர் போக இன்னும் இரண்டு பேர் போட்டியில் இருக்கின்றனர். ஒருவர் மாவட்டச் செயலாளர் தணிகா. எளிய பின்னணியைக் கொண்டவர். அரசு போக்குவரத்துக் கழகத்தில்தான் பணியாற்றி வந்தார். மக்கள் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர், கட்சி ஆரம்பிக்கப்பட்டவுடன் அரசு வேலையையே விட்டு விட்டார். இவரையும் தலைமை கவனத்தில் வைத்திருக்கிறது.

அதேநேரத்தில் வி.எஸ்.பாபுவின் மகன்களில் ஒருவருக்கு சீட் கொடுக்கலாம் என்றும் முதல்வர் நினைக்கிறார். 'கவலைப்படாதீங்க, நான் இருக்கேன். உங்க குடும்பத்தை நான் பார்த்துக்குறேன்' என முதல்வர் அவர்களின் குடும்பத்திடம் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். மேலும், வி.எஸ்.பாபுவின் மகன் சதீஸை களத்தில் இறக்கலாம் எனும் திட்டம் இருக்கப் போய்தான் இறுதிச்சடங்கிலும் முதல்வர் அவ்வளவு மும்மரமாக கலந்துகொண்டார். தணிகா, வி.எஸ்.பாபு மகன் இந்த இருவரின் பெயர்தான் இறுதிப்பட்டியலில் இருக்கிறது. முதல்வர் கூடிய சீக்கிரமே முடிவெடுத்து வேட்பாளரை தொகுதிக்குள் வேலையைத் தொடங்க உத்தரவிடுவார்' என்கிறார்கள்.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →