உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

'முதலமைச்சரே மாணவர்களிடம் பாரபட்சம் காட்டலாமா?' – சர்ச்சையாகும் தவெகவின் கல்வி விருது!

தினப்புயல் • • 8 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
'முதலமைச்சரே மாணவர்களிடம் பாரபட்சம் காட்டலாமா?' – சர்ச்சையாகும் தவெகவின் கல்வி விருது!
வாசிப்பு
Facebook Telegram

'தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா' என்ற பெயரில் தவெக சார்பில் 10, 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்டளவில் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு முதல்வர் விஜய் விருது வழங்கியிருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே தவெக சார்பில் இந்த விருது நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தாலும், இந்த ஆண்டு நடத்தப்பட்டிருக்கும் நிகழ்ச்சி கல்வியாளர்கள் மத்தியில் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.

.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கல்வியாளர்கள் சிலர், 'மதிப்பெண் அடிப்படையில் மாணவ மாணவிகளை முதலிடம், இரண்டாமிடம் என தரவரிசைப்படுத்துவது தவறான முன்னுதாரணமாகும். இப்படி தரவரிசைப்படுத்தி முதல் மூன்றிடம் பிடித்த மாணவர்களை மட்டும் ஊடக வெளிச்சம் கிடைக்கும் வகையில் பாராட்டி பரிசளிப்பது மற்ற மாணவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும்.

.

சராசரியாக படிக்கும் மாணவர்கள் எதோ வாழ்க்கையிலேயே தோற்றவர்கள் போன்ற உளவியல் சிக்கலை உண்டாக்கும். கல்வியாளர்கள் இந்த பிரச்னையை முன்னெடுத்து சொல்லிதான் 2017 இல் தமிழக அரசு மாநில, மாவட்டளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை அறிவிக்கும் வழக்கத்தை கைவிட்டது. அந்த முடிவை எடுத்த அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இப்போது தவெகவில்தான் இருக்கிறார். '

.

முதலிடம் பிடித்த மாணவர்களை அறிவிப்பது மற்ற மாணவர்களுக்கு தேவையில்லாத அழுத்தத்தை உண்டாக்கும்' எனக் கூறிதான் செங்கோட்டையன் அந்த நடைமுறையை கைவிட்டார். அவராவது முதல்வர் விஜய்க்கு இதை எடுத்துக் கூறி புரிய வைத்திருக்கலாம். ஆட்சியைப் பிடிப்பதற்கு முன் தவெக தலைவராக விஜய் இந்த விருது நிகழ்ச்சியை நடத்தியதைக் கூட அவரது தனிப்பட்ட விருப்பம் என எடுத்துக் கொள்ளலாம். இப்போது அவர்தான் தமிழகத்தின் முதல்வர்.

.

எல்லா மாணவ மாணவிகளையும் ஒரே மாதிரியாக அணுக வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. அவர் இந்த நிகழ்ச்சியை இந்த பாணியில் நடத்தும் முன் கொஞ்சம் யோசித்திருக்கலாம். அதுவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனே மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி என மேடையில் அறிவிப்பது ரசிக்கும் வகையில் இல்லை. இப்படி தரவரிசைப்படி மாணவ மாணவிகளை பிரிக்காமல் வேறு பாணியில் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சியை வடிவமைக்கலாம்' என்கின்றனர்.!

ஆலோசிப்பாரா முதல்வர் விஜய்?

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →