தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவும், உலக நாடுகளுடனான பொருளாதார உறவை வலுப்படுத்தவும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றிருக்கிறார்.
அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
அந்த வகையில் குவாண்டம் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு சென்ற அவர், குழந்தையை சுமந்தபடி அலுவலக பணிகளைக் கவனித்து வந்த அந்நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அலெக்ஸாண்ட்ரா டாமன்ஹைனை சந்தித்திருக்கிறார்.
.
அப்போது அவரைப் போலவே கைக்குழந்தையுடன் பணியாற்றி வரும் திரு.வி.க நகர் எம்.எல்.ஏ பல்லவி குறித்து பகிர்ந்திருக்கிறார், அமைச்சர் கீர்த்தனா.
"எங்கள் ஊரிலும் ஒரு எம்.எல்.ஏ இதே போன்று குழந்தையை தூக்கிக் கொண்டு வந்துதான் சட்டசபையிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் உரையாற்றுவார்" என்று தவெக எம்.எல்.ஏ பல்லவியை நினைவுகூர்ந்திருக்கிறார். குழந்தையுடன் இருந்த பெண் தொழிலதிபருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அமைச்சர் கீர்த்தனா பகிர்ந்திருக்கிறார்.
.தவெக அரசு Vs டாஸ்மாக் ஊழியர்கள் – என்னதான் பிரச்னை?!.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>








