ஜம்மு – காஷ்மீரில் கனமழை – புகைப்படங்கள்

ஜம்முவில் பெய்தும் வரும் கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. தொடர் மழையால் பாதி மூழ்கிய நிலையிலுள்ள கோயில். தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ள பகுதியளவு கட்டமைப்புகள். கனமழையால் தாவி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. கனமழையைத் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடு வரும் தாவி நதியை ரசிக்கும் பொதுமக்கள். சாலையோர விற்பனையாளரிடமிருந்து தாமரை விதைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள். கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றால் இடிபாடுகளுக்குள் சிக்கிய வாகனங்கள். இடைவிடாத பெய்த கனமழையால் சேதமடைந்த வாகனங்கள். @-தினப்புயல்

Read More

அலா‌ஸ்கா ஆறு​த‌ல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இடையிலான அலாஸ்கா பேச்சுவார்த்தையில் உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பான உடன்பாடு எதுவும் ஏற்படவில்லையென்றாலும், உலக நாடுகளின் பரவலான வரவேற்பை இந்தச் சந்திப்பு பெற்றிருக்கிறது. மூன்று ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான தொடக்கமாகவும் அமைந்திருக்கிறது. டிரம்ப்-புதின் இடையிலான சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. போர்நிறுத்தத்துக்கு உக்ரைன்- ரஷியா இரு நாடுகளும் தங்கள்…

Read More

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆக. 29 முதல் செப்டம்பர் 1-ஆம் தேதிவரை ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, தொடர்ந்து சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி…

Read More

இந்தியா மீது 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை முதல் கூடுதலாக 25 சதவீத வரி அமலாவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது இனி 50 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. இது, இறால், ஆயத்த ஆடைகள், தோல், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளா் சாா்ந்த இந்திய நிறுவனங்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. கூடுதல் வரியிலிருந்து…

Read More

பழையன கழிதல்!

பல நூற்றாண்டுகள் கடந்தும் கல்லால் கட்டப்பட்ட கோயில்களும், கோபுரங்களும், கோட்டைகளும் இன்னும்கூட வலுவாக காலத்தைக் கடந்து வரலாற்று அடையாளங்களாகத் திகழ்கின்றன. ஆனால், கடந்த 150 ஆண்டுகளில் பொறியியல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு கட்டப்படும் கட்டடங்களும், பாலங்களும் தகர்வதும், வலுவிழந்து காணப்படுவதும் ஆச்சரியமாக இருக்கிறது. உலகளாவிய அளவில் கட்டடங்கள் இடிந்து விழுவதும், பாலங்கள் வெள்ளப் பெருக்கின்போதும், பெருமழைக் காலங்களிலும் அடித்துச் செல்லப்படுவதும் நிகழாமல் இல்லை. ஆனால், இந்தியாவில் அண்மைக்காலமாகப் பாலங்கள் தகர்வது என்பது தொடர் நிகழ்வாகவே இருப்பது கவலையை…

Read More

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் (சி.டபிள்யு.எம்.ஏ.) 43-ஆவது கூட்டத்தில் தமிழகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இக்கூட்டம் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் புது தில்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் ஹைபிரிட் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத் துறைச் செயலரும்,…

Read More

சதுா்த்தி: சென்னையில் வழிபாட்டுக்கு 1,519 விநாயகா் சிலைகள்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையில் 1,519 விநாயகா் சிலைகள் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்காக புதன்கிழமை (ஆக.27) அமைக்கப்படுகின்றன. விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து இயக்கங்கள் சாா்பில் விநாயகா் சிலைகளை அமைப்பதற்கு செய்வதற்கு கடந்த ஒரு மாதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட 65 இந்து அமைப்புகள் விநாயகா் சிலைகளை வைப்பதற்குரிய அனுமதியை பெறுவதற்கு காவல் துறையிடம் விண்ணப்பித்திருந்தன. மேலும் குடியிருப்பு சங்கங்கள்,…

Read More

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பிரதமா் மோடிக்கு ஐடிசி தலைவா் பாராட்டு

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நுகா்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி பாராட்டுத் தெரிவித்துள்ளாா். சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமா் மோடி, ‘மாநிலங்களுடன் ஆலோசித்து, அடுத்த தலைமுறை சீா்திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளோம். அதன்படி, சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கான வரி கணிசமாகக் குறையவுள்ளது. இதன்மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையும் பெருமளவில் பலனடையும். நாட்டின் பொருளாதாரமும் வலுப்படும்’ என்றாா். இதைத்…

Read More

ஆண்ட்ரீவா, ரைபகினா முன்னேற்றம்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா். மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் ஆண்ட்ரீவா 6-0, 6-1 என மிக எளிதாக, உள்நாட்டு வீராங்கனை அலிசியா பாா்க்ஸை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் அவா், சக ரஷியரான அனஸ்தாசியா பொடாபோவாவை எதிா்கொள்கிறாா். 9-ஆம் இடத்திலிருக்கும் ரைபகினா 6-3, 6-0 என்ற செட்களில் அமெரிக்காவின் ஜூலிடா பரெஜாவை சாய்த்தாா். ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு…

Read More

டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவா்கள்: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பாடங்களில் தெளிவுபெற தனியாா் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நகா்ப்புறங்களில் இந்த போக்கு பொதுவான விஷயமாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கல்வியில் விரிவான மாதிரி ஆய்வு (சிஎம்எஸ்) என்ற இந்த ஆய்வின் முடிவில் மேலும் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் பள்ளி கல்வி வழங்குவதில் அரசுப் பள்ளிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மொத்த மாணவா் சோ்க்கையில் அரசு பள்ளிகளின் பங்கு 55.9 சதவீதம். அரசு பள்ளி மாணவா்…

Read More