
ஒரே டீலில் 186 BMW, மெர்சிடிஸ் கார்கள்.. ரூ.21 கோடியை சேமித்த ஜெயின் சமூக உறுப்பினர்கள்.!
வணிக ரீதியிலான பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்ற ஜைன சமூகம், சமீபத்தில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் பிஎம்டபிள்யூ, ஆடி, மெர்சிடிஸ் போன்ற 186 உயர்தர ஆடம்பரக் கார்களை வாங்கியுள்ளது. இதன் மூலம், மொத்தமாக ரூ.21 கோடி தள்ளுபடியை அவர்கள் பெற்றுள்ளனர். இந்த விற்பனையை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஜைன் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (JITO) ஏற்றுக் கொண்டது. JITO அமைப்பில் இந்தியா முழுவதும் 65,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிகழ்வு ஆடம்பரக் கார்…