latest

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்; தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைக்கு ஸ்டாலின் எதிர்ப்பு | We will prevent disenfranchisement; Stalin opposes Election Commission’s SIR move

பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது. இதன்முடிவில், 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் இப்பணியைத் தொடங்கும்போதே கங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அரசைக் குற்றம்சாட்டி எதிர்த்தது. இவ்வாறிருக்க, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கோவா ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் SIR நடத்தப்படும்…

Read More

மயிலாடுதுறை: வாய்க்காலில் கலக்கும் கழிவுநீர்; தீர்வின்றி அல்லாடும் கிராம மக்கள்!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே ஆறுபாதியில் உள்ள சத்தியவாணன் வாய்க்கால், சுற்றியுள்ள 21க்கும் மேற்பட்ட கிராமங்களுங்கும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கும் முக்கிய நீர் பாசனமாக அமைந்துள்ளது. மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் இதன் கழிவுநீரானது பல வருடங்களாக காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலான ஆறுபாதி சத்தியவாணன் வாய்க்காலில் திறந்து விடப்படுகிறது. இதனால், சத்தியவாணன் வாய்க்கால் ஓடும் பல்வேறு கிராமங்களிலும் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் அப்பகுதி மக்களுக்கும் பல்வேறு நோய்த்தொற்றுகளும் ஏற்படுகிறது….

Read More

CJI கவாய் மீது காலணி வீசிய வழக்கு: ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த நீதிமன்றம் | Supreme Court Declines Contempt Action Against Lawyer Who Threw Shoe at CJI Gavai

மேலும், “நடந்த சம்பவம் பெருமைக்குரியதாக மாற்றப்படுகிறது… இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க நீதிமன்றத்துக்கு போதுமான அதிகாரம் உள்ளது.” என்றும் கூறினார். விகாஸ் சிங்கின் வாதத்தைக் கேட்ட நீதிபதி சூர்யா காந்த், “கிஷோர் செய்தது கடுமையான குற்றவியல் அவமதிப்பு… ஆனாலும் நீதிபதி ஏற்கனவே மன்னித்த நிலையில், நீதிமன்றம் இதைத் தொடர வேண்டுமா” எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு விகாஸ் சிங், “நீதிபதி அவரை மன்னித்ததாகக் கூறியது அவரது தனிப்பட்ட முடிவு மட்டுமே. நீதித்துறையின் சார்பானது அல்ல… மக்கள்…

Read More

சினிமாவை மிஞ்சிய தங்க கடத்தல்.. அலறவிட்ட துபாய் பயணி.. டிரெண்டாகும் வீடியோ..!

தங்கம் விலை அதிரடியாக உயர துவங்கிய நாளில் இருந்து இந்தியாவுக்கு தங்கத்தை கடத்தி வருவது அதிகரித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரித்துவிட்டதாக சுங்க துறை அதிகாரிகள் கூறிய செய்தி வெளியிடப்பட்ட நிலையில், துபாய் பயணி ஒருவர் மிகவும் திறமையாக தங்கத்தை கடத்த முயற்சி செய்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. சூர்யா நடித்து வெளியான அயன் படத்தில் தங்கம், வைரம் ஆகியவற்றை எப்படியெல்லாம் டிசைன் டிசைனாக இந்தியாவுக்குள்…

Read More

பழைய தங்கம் தான் இப்ப பெஸ்ட் சாய்ஸ்.. நகை கடைகள் ஷாக்..!!

இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகைக் காலம் முடிந்துள்ள வேளையில், நவராத்திரி, தன்தேரஸ், தீபாவளி பண்டிகை நாட்களில் நாட்டில் பொதுவாகவே தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ள காரணத்தால் பொது மக்களை பழைய நகைகளை புதியவற்றுக்கு மாற்றுவது எப்போதும் இல்லாமல் இந்த பண்டிகை காலத்தில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கியில் இருக்கும் தங்கம் மட்டும் அல்லாமல், சுமார் 22,000 டன் தங்கம் இந்திய மக்களின் வீடுகளில் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக அரசு தகவல்கள்…

Read More

`மீண்டும் திமுகவுக்கே வாய்ப்பு; விஜய் செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியது!' – ஓபிஎஸ்

சிவகங்கை மாவட்டம் காளையர் கோவிலில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குரு பூஜையில் கலந்துகொண்ட முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுத் தலைவருமான ஓ பன்னீர் செல்வம் மருது பாண்டியர் சிலைக்கு வெள்ளி கவசம் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் பன்னீர்செல்வம். அதிமுகவுடனான போராட்டம் பற்றி பேசியவர், “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கின்ற குழுவாக நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் முக்கிய நோக்கமே, இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்…

Read More

பள்ளிக்கரணை: `சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி; எத்தனை கோடி கைமாறியது?' – அரசை சாடும் சீமான்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழித்து 2,000 கோடி ரூபாய் அளவில் ஊழல் ஏற்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் 14.7 ஏக்கர் நிலப்பரப்பில் (அளவை எண்கள். 453, 495, 496, 497, 498) பிரிகேட் மார்கன் ஹெய்ட்ஸ் (Brigade Morgan Heights) என்ற பெயரில் 1,250 ஆடம்பர குடியிருப்புகள் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் துறை, வனத்துறை மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக்…

Read More

உங்க குடும்பத்துல ஒருத்தனா உங்களோட என்னைக்குமே இருப்பேன்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் ஆறுதல் | TVK Vijay met consoles the families of the victims in Karur

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை மாமல்லபுரம் வரவழைத்து விஜய் ஆறுதல் கூறி வருகிறார். இந்தச் சந்திப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நேற்றிரவே கரூரிலிருந்து மாமல்லபுரம் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஒரு தனியார் விடுதியில் அத்தனை குடும்பத்தினரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கரூர் விஜய் கூட்டம் அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூற விஜய் இன்று காலை எட்டரை மணியளவில் தனியார் விடுதிக்கு வந்து சேர்ந்தார். காலை 9 மணிக்கு சந்திப்பு தொடங்கியது….

Read More