ரூ.300 கோடி: நிறுத்தப்பட்ட நிலுவைத் தொகை; மூடப்படுகிறதா காமராஜர் பல்கலைக் கழகம்? – சீமான் கேள்வி | Rs.300 crore: Suspended dues; Is Kamaraj University being closed? – Seeman questions
மதுரையின் அடையாளங்களில் ஒன்றான மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக செய்திகள் வெளியானது. பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் விதி மீறலோடு பணியமர்த்தப்பட்டதாகக் கூறி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “மதுரையில் பெருந்தலைவர் தாத்தா காமராசர் அவர்களின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகம்…
