கரூர் : வாபஸ் பெறுவதாக கூறிய ஆனந்த்; அனுமதி அளித்து தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் – நடந்தது என்ன?
கரூரில், கடந்த செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான…
