Delta விவசாயிகளின் கண்ணீர் கதை: நெல் கொள்முதலில் தோல்வியடைந்த ஸ்டாலின் அரசு | Ground Report | Delta farmers’ tearful story: Stalin’s government failed in paddy procurement | Ground Report
இந்த ஆண்டு வழக்கத்தைவிட டெல்டாவில் இரண்டு மடங்கு அதிகமாக குறுவை சாகுபடி நடந்துள்ளது. விவசாயிகள் எதிர்பார்த்ததைவிட நல்ல மகசூலும் கிடைத்தது. ஆனால், இதற்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய விவசாயிகள் துயரத்தில் இருக்கிறார்கள். காரணம், தமிழக அரசின் அலட்சியம். இந்த முறை அதிகமான விளைச்சல் வரும் என்பது தெரிந்திருந்தும், அதனை தங்கு தடையில்லாமல் காலத்தோடு கொள்முதல் செய்வதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்யவில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடம் இல்லை, சாக்கு இல்லை, சணல் இல்லை என்று…
