MCX தளத்தில் தொழில்நுட்ப கோளாறு.. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் தவிப்பு..!!
இந்தியாவின் மிகப்பெரிய கமாடிட்டி வர்த்தக தளமான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX), இன்று காலை வர்த்தகம் துவங்கும் நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்ய முடியாமல் தவித்தது மட்டும் அல்லாமல் வர்த்தகம் செய்வதற்கான கதவுகள் 10 மணி வரையில் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக காலை 9 மணிக்கு தொடங்கும் எம்சிஎக்ஸ் வர்த்தகம், இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கும் என்று எம்சிஎக்ஸ் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. இதன் பின் 9.45 மணிக்கு துவங்கும்…
