அமெரிக்க பங்குச்சந்தையில் இப்படியொரு விஷயம் நடந்திருக்கே.. Nvidia செம மாஸ்..!!
அமெரிக்க நிறுவனமான என்விடியா, உலகின் முதல் 5 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு 4 டிரில்லியன் டாலர் என்ற சாதனையை படைத்த இதே நிறுவனம், இப்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று ஆப்பிள் 4 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்ற 3வது பெரிய நிறுவனமாக உருவெடுத்த நிலையில், இன்று என்விடியா புதிய சாதனையை படைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு, என்விடியா-வின் சிப்கள் மிகவும் முக்கிய தேவையாக மாறியிருக்கும் காரணத்தால்…
