SIR மூலம் வாக்குத் திருட்டு; பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்
தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமாவிற்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்திற்கான ஆணை வழங்குபட்டது. தொடர்ந்து வீடு கட்டபட்டு வருகிறது. வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் கனவு. குடிசைக்கு பதிலாக காங்கிரீட் வீடுகள் கட்டவேண்டும், குடிசை இல்லா தமிழகம் அமைய வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டத்தை கலைஞர் கருணாநிதி கொண்டுவந்தார். வருவாய்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பொறுப்பேற்ற பின்னர்…
