அதிமுக: “சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பபால பணியில் பல கோடி ரூபாய் ஊழல்” – ராஜேந்திரபாலாஜி | AIADMK: “crores of rupees of corruption in Sivakasi Satchiyapuram railway overpass project” – Rajendra Balaji
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு தற்போது இந்த ஆட்சியில் சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது. சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே பாலத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. இந்த மேம்பாலப் பணியில் 15 சதவீதம் கமிஷன் வாங்கி பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது” என்று…
