latest

பிற்படுத்தப்பட்டோருக்கான 42% இட ஒதுக்கீட்டிற்குத் தற்காலிக தடை; மாநிலம் முழுவதும் பந்த் | Telangana to decide on 42 pc BC quota issue in Oct 23 Cabinet meet

இந்த பந்த்திற்கு “BC JAC’ கூட்டமைப்பு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அம்மாநில துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, பொது மக்களும் அனைத்து சமூகம் சார்ந்தவர்களும் பந்த்-இல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தெலங்கானா முழுவதும் பந்த் இந்த பந்த்தில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள், நாடகம், பேருந்து போக்குவரத்து உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கின்றன. RTC பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன. மருந்தகங்கள், மருத்துவனமனைகள் போன்ற அத்யாவசிய சேவைகள் மட்டும் இயங்கி வருகின்றன….

Read More

EPFO 3.0 ஊழியர்களுக்கான PF பணம் எடுக்கும் விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) அதன் EPFO 3.0 திட்டத்தின் கீழ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, உறுப்பினர்கள் தங்கள் PF இருப்பில் இருந்து 75% தொகையை எந்தவித ஆவணங்களும் இல்லாமல் உடனடியாக எடுக்கலாம். சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் சேமிப்பை எளிதாகப் பயன்படுத்துவதற்கும், அதே நேரத்தில் மீதமுள்ள 25% இருப்பு மூலம் நீண்ட கால நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதி என்ன, உங்கள்…

Read More

2026-ல் எதிர்பாராத கூட்டணி உருவாக வாய்ப்பு; அமமுக டிடிவி தினகரன் கணிப்பு | AMMK TTV Dhinakaran predicts an unexpected alliance in 2026

செங்கல்பட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், “நாங்கள் கூட்டணிக்கு செல்கிறோமா அல்லது எங்கள் தலைமையில் கூட்டணி அமைகிறதா என்பதெல்லாம் பொங்கல் நேரத்தில் தெரியவரும். அதுவொரு புதிய கட்சி (த.வெ.க) எங்களை விமர்சிப்பவர்களை நாங்கள் விமர்சிக்காமல் விடமாட்டோம். அதேநேரத்தில் இன்னொரு கட்சியை, அதன் தலைவரை தேவையில்லாமல் விமர்சிப்பது எனக்கு பழக்கமல்ல. எனக்குத் தெரிந்தவரை விஜய் தலைமையில் தேர்தலில் ஒரு கூட்டணி போட்டியிட வாய்ப்பிருப்பதாக நினைக்கிறேன். அது யார் கூட என்று போகப்போகத்தான் தெரியும். தமிழ்நாட்டில் நான்கு முனைப்…

Read More

சிலிக்கான் சிட்டிக்கு இடியாப்ப சிக்கல்.. 2031-க்குள் 1.47 கோடியாக உயரும் மக்கள் தொகை..!!

இந்தியாவின் தொழில்நுட்ப நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில், அடுத்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 20 சதவீதத்திற்கும் மேலாக உயரும் என்று மாநில அரசுத் தரவுகள் தெரிவித்துள்ளன. பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநரகத்தின் அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டில் சுமார் 1.22 கோடியாக இருந்த பெங்களூருவின் மொத்த மக்கள் தொகை, 2031ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 1.47 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலேயே 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பெங்களூருவில் மட்டும் 1.93% மக்கள் தொகை வளர்ச்சி…

Read More

டெல்லி: “உங்கள்திருமண ஆர்டருக்காக காத்திருக்கிறோம்” – திருமணம் செய்யும்படி ராகுல் காந்தியிடம் சொன்ன ஸ்வீட்கடைக்காரர் | Delhi Sweet shop owner who told Rahul Gandhi to get married

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் மிகவும் பழமையான சந்தாவாலா மிட்டாய் கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார். அவரை கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் அன்புடன் வரவேற்றார். ராஜீவ் காந்தி காலத்தில் இருந்தே அவரது குடும்பம் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சந்தாவாலா மிட்டாய் கடையில்தான் இனிப்புகள் வாங்குவது வழக்கம். அதனால் ராகுல் காந்தி சந்தாவாலா மிட்டாய் கடையில் இருந்தவர்களிடம் மிகவும் உரிமையுடன் பேசினார். இனிப்புகள் செய்யும் இடத்திற்குச் சென்ற ராகுல் காந்தி…

Read More

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம்; த.வெ.க சார்பில் வழங்கப்பட்டது | Rs. 20 lakh each was given to the families of those who died in the Karur stampede; TVK provided

விசாரணைகள் ஒரு பக்கம் சென்றுகொண்டிருக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் கரூருக்கு நேரில் சென்று, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து தலா ரூ. 1 லட்சம் காசோலை வழங்கினார். அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், தலா ரூ. 50,000 காசோலையாக உயிரிழந்தோர் குடும்பங்களிடம் தரப்பட்டது. இந்த நிலையில் விஜய் அறிவித்தபடி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு த.வெ.க சார்பில் தலா ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக உயிரிழந்த 41 பேரில் 39 குடும்பங்களின்…

Read More

கரூர் செல்ல சட்ட அனுமதி கோரியிருப்பதை உறுதி செய்தார் விஜய் | Karur Stampede: 39 Families Receive ₹20 Lakh Aid from Vijay’s Party, Leader Promises Visit Soon

கடிதத்தில் விஜய் கூறியிருப்பதாவது, “கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்தச் சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம். தவெக விஜய் கடிதம் சென்ற வாரம் உங்களுடனான நம் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள மேற்கொண்ட காணொளி அழைப்பில் நாம் சொன்னது போலவே, நமது சந்திப்பிற்காக, அதற்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம். இதனிடையே, நாம்…

Read More

வானை அலங்கரித்த வாணவேடிக்கை.. சிவகாசியில் இந்தாண்டு ரூ.7,000 கோடியை எட்டிய பட்டாசு விற்பனை..!!

இந்தியாவின் பட்டாசு தேவையில் 90 சதவீதத்தை உற்பத்தி செய்யும் சிவகாசியின் வரலாறு, ஒரு துளிப் போராட்டத்தில் தொடங்குகிறது. 1922ஆம் ஆண்டில் சிவகாசியில் ஏற்பட்ட கடுமையான வேலையின்மை காரணமாக, அங்கிருந்து அய்ய நாடார் மற்றும் சண்முக நாடார் ஆகிய இரு சகோதரர்கள் தீப்பெட்டித் தொழிலைக் கற்க கொல்கத்தா சென்றனர். அங்கு 8 மாதங்கள் தங்கியிருந்து தொழிலைக் கற்றுக்கொண்ட அவர்கள், 1923ஆம் ஆண்டு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி, ‘நேஷனல் ஃபயர் ஒர்க்ஸ்’ என்ற தீப்பெட்டித் தொழிற்சாலையைத் தொடங்கினர். ஆரம்பத்தில்…

Read More

"பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எளிதானது" – ட்ரம்ப் சொன்னதென்ன?

உலகில் 8 போர்களை நிறுத்தியதாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 9வதாக பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதலை நிறுத்த வேண்டியிருந்தால், அது தனக்கு மிகவும் எளிதான ஒன்று என்றும் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் போர் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், “பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது அல்லது ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடந்து கொண்டிருப்பது புரிகிறது. அதைத் தீர்க்க வேண்டியிருந்தால், முடிவுக்கு கொண்டுவருவது எனக்கு எளிதானதுதான். ஆனால் இதற்கிடையில், நான் அமெரிக்க அரசை நடத்த வேண்டும்… போர்களைத்…

Read More

மதுரை: அடுத்த மேயர் யார்? – மதுரை திமுக-வில் நீடிக்கும் குழப்பம்!

மேயர் இந்திராணி பொன் வசந்த் ராஜினாமா செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்தாலும், அடுத்த மேயரை தேர்வு செய்வதில் மதுரை தி.மு.க-வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திராணி மாநகராட்சி வரி மோசடி விவகாரத்தில் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்ட பின்பு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் மேயர் இந்திராணி புறக்கணிக்கப்பட்டார், இன்னொரு பக்கம் ‘மேயர் மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று பொதுவெளியில் அ.தி.மு.க-வினரும், கட்சிக்குள் தி.மு.க-வினரும் வலியுறுத்தி வந்தார்கள். ‘மரியாதை கொடுங்கள்….அல்லது வேறு மேயரை நியமியுங்கள்!’ என்று,…

Read More