Category: இந்தியா
இந்தியா
முதல்வர் விஜய்யா? ADMK உடன் கூட்டணியா? – TVK Arun Raj Interview
கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக தவெக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரப் பயணம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு தவெகவின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் விகடனுக்கு அளித்த பேட்டி.
துணை ஜனாதிபதி நிகழ்ச்சி போலீஸ் விளக்கம் ஏற்க முடியாது.. மத்திய அரசு உதவி நாடுவோம் – வானதி சீனிவாசன் Vanathi Srinivasan slams DMK government over VP program security arrangements
திமுக அரசு என்பதால் தான் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. குற்றவாளிகளின் பெயர்களை கூட காவல்துறை சொல்லவில்லை. அவர்கள் மீதி ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் எப்படி சாதாரணமாக வர முடியும். உண்மையை கண்டறிந்து மக்களுக்கு சந்தேகத்தை போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணன் அவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கும்போது, எவ்வளவு தைரியம் இருந்தால் இவர்கள் போவார்கள். காவல்துறை இந்த விஷயத்தை ஏன் திசை திருப்புவது சந்தேகமளிக்கிறது. காவல்துறை உண்மையை வெளி கொண்டு வரவில்லை என்றால்,…
கேரளா: பெண்களுக்கு மாதம் ரூ.1000 பென்சன் தேர்தலுக்காக 3 புதிய அறிவிப்பு வெளியிட்டார் பினராயி விஜயன்!
கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே பல தாராள திட்டங்களை அறிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அதுபோன்று கேரளா பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்ததற்கு ஆளும் சி.பி.எம் கூட்டணியில் உள்ள சி.பி.ஐ கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து அந்த திட்டம் குறித்தும் ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில்…
TVK: “நாங்கள் தலைமறைவாக இல்லை. அரசியலில் அவதூறுகள், அடிகள் எல்லாம் வரத்தான் செய்யும்” – தவெக ராஜ்மோகன் பேட்டி | Rajmohan met and spoke to the media after the Karur stampede incident.
தவெக பிரச்சாரத்தின் போது நடந்த கரூர் கூட்டநெரிசலில் 41பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, விஜய்யும், தவெகவினரும் இப்போதுதான் மெல்ல மெல்ல வெளியில் வரத் தொடங்கியிருக்கின்றனர். இரண்டு நாள்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து ஆறுதலும், மன்னிப்பும் தெரிவித்தார் விஜய். அதைத்தொடர்ந்து இன்று சென்னை பனையூரில் தவெக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக துணைப்பொதுச்செயலாளர் ராஜ்மோகன், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்க்க தவெகவின்…
SIR மூலம் வாக்குத் திருட்டு; பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்
தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமாவிற்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்திற்கான ஆணை வழங்குபட்டது. தொடர்ந்து வீடு கட்டபட்டு வருகிறது. வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் கனவு. குடிசைக்கு பதிலாக காங்கிரீட் வீடுகள் கட்டவேண்டும், குடிசை இல்லா தமிழகம் அமைய வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டத்தை கலைஞர் கருணாநிதி கொண்டுவந்தார். வருவாய்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பொறுப்பேற்ற பின்னர்…
Trump: “எனக்குப் பிரதமர் மோடி மீது மிகுந்த அன்பும், மரியாதையும் இருக்கிறது, ஆனால்”- மோடி குறித்து டிரம்ப் பேச்சு|trump on indian prime minister narendra modi
அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. தென் கொரியாவில் ஆசியா – பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ( APEC) தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய டிரம்ப், “அணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகள் (இந்தியா- பாகிஸ்தான்) தங்களுக்குள் தீவிரமாக மோதிக் கொண்டிருந்தன. நான் மத்தியஸ்தம் செய்தபோது அவர்கள் இருவருமே நாங்கள் போரைத் தொடர்வோம் என்றனர். இருவருமே வலுவானவர்கள். பிரதமர் மோடி மிகவும் நல்லவர். ஆனால் அவர்…
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில் ரூ. 888 கோடி லஞ்ச ஊழல் | DMK and Minister Thiru KN Nehru’s brother’s 888 crore ‘JOB RACKET ‘𝐒𝐜𝐚𝐦
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில் ரூ. 888 கோடி லஞ்ச ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் கே.என். நேரு மீது பெரும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 2,538 பணி நியமனத்தில் தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ. 888 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் நிறுவனத்தின் வங்கி…
ஊழல் குறித்த அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர் சந்திப்பு | BJP annamalai says 𝟖𝟖𝟖 𝐂𝐫𝐨𝐫𝐞 𝐒𝐜𝐚𝐦 𝐔𝐧𝐞𝐚𝐫𝐭𝐡𝐞𝐝 𝐢𝐧 𝐓𝐍.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு நியமனங்கள் நடைபெற்று பெரும் மோசடி திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையின் புகாரை முன்வைத்து பரபரப்புக் குற்றச்சாட்டை கிளப்பி இருக்கிறார். அண்ணாமலை புகார்: 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 2,538 பணி நியமனத்தில் தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ. 888 கோடி லஞ்சம் பெறப்பட்டு உள்ளது. 2,538 பதவிகளுக்கு விண்ணப்பித்த 1.12…
நேற்று முதல் பாலஸ்தீனத்தைத் தாக்கி வரும் இஸ்ரேல் – நெதன்யாகு என்ன சொல்கிறார்?|Why Israel attack Palestine now?
“நான் நிறுத்திய எட்டாவது போர் இது’ – இப்படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமை பீற்றிக்கொண்ட இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் மீண்டும் ஆரம்பிக்கிறது போலும். நேற்று காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல். இதற்கு, ‘ஹமாஸ் தான் முதலில் தாக்கியது’ என்கிற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலை அந்த நாட்டின் அதிபர் நெதன்யாகு, ‘ஹமாஸை எதிர்த்த சக்திவாய்ந்த தாக்குதல்’ என்று குறிப்பிடுகிறார். இஸ்ரேல் தற்போதும் இந்தத் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்தத் தாக்குதலினால்…
