php hit counter

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையுமா?

11

சிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை மூன்று விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான் அணி.

லீட்ஸின் ஹெடிங்லி மைதானத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேடிங்கை தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹமத் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவரை தொடர்ந்து வந்த குல்படின் 15 ரன்களையும், அதன்பிறகு வந்த ஹஷ்மடுல்லாஹ் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.

ஆனால் அந்த அணியின் ஆப்கான் மறும் நஜிபுல்லா ஆகியோர் தலா 42 ரன்களை எடுத்து அணியின் ரன்களை அதிகரித்தனர். முதல் இன்னிங்ஸின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை எடுத்திருந்தது.

அதனை தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபக்கார் ரன் ஏதும் எடுக்காமல் ஒவுட் ஆனார்.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக வாசிம் 49 ரன்களையும், பாபர் 45 ரன்களையும் எடுத்தனர்.

கடைசியில் மூன்று பந்துகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 49.4 ஓவர்களில் பாரப்பான ஒரு வெற்றியை பெற்றது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தானின் வெற்றியால் இங்கிலாந்து அணி இன்று இந்தியாவுடன் நடைபெறும் போட்டியிலும், புதன்கிழமையன்று நியூசிலாந்துடன் நடைபெறும் போட்டியிலும் வெற்றிப் பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பாகிஸ்தானின் இந்த வெற்றியால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எந்த ஒரு பலனும் இல்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியை போன்று பாகிஸ்தானுடனான போட்டியையும் ஆப்கானிஸ்தான் அணியால் பரப்பாகவே முடித்தது.

பாகிஸ்தான் அணி 30 பந்துகளில் 46 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில், ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் குல்படின் வீசிய ஓவர் தடுமாறிக் கொண்டிருந்த பாகிஸ்தான் அணியை வெற்றியை நோக்கி செல்ல வைத்தது.

46ஆவது ஓவருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி ஒவ்வொரு ரன்களாக எடுக்க முயற்சி செய்து வந்தது. அதற்கு முன்பு 18 ஓவர்களில் இரண்டே இரண்டு பவுண்டரிகளை மட்டுமே அடித்திருந்தது பாகிஸ்தான் அணி.

இருப்பினும் 46ஆவது ஓவரின் காரணமாக, போட்டி மீண்டும் பாகிஸ்தான் அணியின் பக்கம் திரும்பியது.

ஆப்கானிஸ்தான் அணி நேற்றைய போட்டியில் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் இரண்டிலும் சிறப்பாக கவனம் செலுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

அந்த அணியின் பந்து வீச்சும் சிறப்பாகவே இருந்தது ஆனால் 46ஆவது ஓவர் அந்த நிலையை மாற்றிவிட்டது.

“இது எங்களுக்கு சிறப்பானதொரு வெற்றி. இந்த வெற்றி அவ்வளவு எளிதானக அமைந்துவிடவில்லை,” என்று போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் தெரிவித்தார்.

“அது ஒரு எளிதான இலக்கு அல்ல என்பது எங்களுக்கு தெரியும். ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது என்று எங்களுக்கு தெரியும் எனவே நாங்கள் ஒவ்வொரு போட்டியாக வெற்றி பெற முயற்சிக்கிறோம்.”

“இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியை நாங்கள் பார்ப்போம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“நாங்கள் சிறப்பாக விளையாடினோம். எங்கள் அணியினர் 100 சதவீதம் உழைப்பை தந்தனர். ஆனால் கடைசியில் வாய்ப்பை நாங்கள் நழுவவிட்டு விட்டோம்,” என்று ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் தெரிவித்தார்.

இன்று இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், 11 புள்ளிகள் பெற்று இந்தியா இரண்டாம் இடத்திலும், 11 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன. இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 9 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 8 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

இன்று இந்தியாவுடன் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் நான்காம் இடத்தை பிடிக்கும். இருப்பினும் அரையிறுதிக்கு செல்ல புதன்கிழமையன்று நியூசிலாந்து அணியுடன் நடைபெறும் போட்டியிலும் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.