டிரம்ப் அமெரிக்காவில் மட்டும் உலகளவில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார். ஒருப்பக்கம் அமெரிக்காவில் செலவின கொள்கை ஒப்புதல் பெற முடியாமல் ஷட்டவுன் எதிர்கொண்டு வரும் வேளையில், அமெரிக்காவில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருக்கும் இந்தியாவும் சீனாவும் ரெசிப்ரோக்கல் வரிக்கு அடிப்பணியாமல் இருப்பது டிரம்ப் அரசுக்கு பெரும் நெருக்கடியாக மாறி வருகிறது.
சீனா அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கையை எடுத்து வரும் வேளையில், இந்திய சந்தையை வரி மூலம் அடைய வேண்டும் என திட்டமிட்டு வரும் டிரம்ப் தேவையில்லாமல் பேசி மாட்டிக்கொண்டது மட்டும் அல்லாமல் தற்போது இந்தியாவின் உறுதியான மனநிலையை புரிந்துக்கொண்டு புலம்பியுள்ளார்.

டிரம்ப் பேசிய பொய்:
கடந்த வாரம் டிரம்ப், பிரதமர் மோடியுடன் பேசியாதாகவும், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதி அளித்துள்ளதாக பேசினார். ஆனால் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் இதை முற்றிலும் மறுத்துள்ளது மட்டும் அல்லாமல் டிரம்ப் போன் காலில் மோடியுடன் பேசியதாக எந்த தகவலும் இல்லை என்றும், இந்திய மக்களின் நலனை பாதுகாக்கும் முடிவை தான் இந்தியா எடுக்கும் என திட்டவட்டமாக தெரிவித்தது.
இதேபோல் வெள்ளை மாளிகை இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் அளவை பாதியாக குறைந்துள்ளதாக அறிவித்தது, ஆனால் இதையும் இந்தியா மறுத்து ரஷ்யா கொள்முதலை குறைக்கவில்லை என விளக்கியது.
சொல்லப்போனால் நவம்பர் மாதத்திற்கான ஆர்டர்களையும், டிசம்பர் மாதத்திற்கான ஆர்டர்களையும் ஏற்கனவே இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிடம் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் இந்தியாவுக்கான ஏற்றுமதி 20 சதவீதம் உயரும் எந kpler நிறுவனம் தெரிவித்துள்ளது. கொள்முதல் குறைந்தால் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் தான் குறையும், ஆனால் இதுக்குறித்த தகலல் இப்போது இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
மீண்டும் அதே கதை:
இந்த நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், இந்தியா தனது விதிமுறைகளை ஏற்காவிட்டால் இந்திய பொருட்களுக்கு தற்போது விதிக்கப்பட்டு உள்ள “பெரும் வரி” தொடரும் என்று எச்சரித்தார். இதை தொடர்ந்து டிரம்ப் மீண்டும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டதாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
டிரம்ப், “நான் இந்திய பிரதமர் மோடியுடன் பேசினேன், அவர் ரஷ்ய எண்ணெய் வாங்கப் போவதில்லை என்று கூறினார்” என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். இந்தியா மறுத்துள்ளதை பத்திரிக்கையாளர் டிரம்ப்-யிடம் கேட்டப்போது. இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெய்யை வாங்கினால் தற்போது இருக்கும் அதிகப்படியான வரி எவ்விதமான குறைப்பும் இல்லாமல் தொடரும் என தெரிவித்தார்.
இந்தியா – ரஷ்யா
இரு நாடுகளின் நட்பு உக்ரைன் போருக்கு பின்பு துவங்கியது இல்லை, நீண்ட காலமாக இருக்கும் ஒரு விஷயம். இப்படியிருக்கும் வேளையில் இந்தியா – ரஷ்யா மத்தியிலான வர்த்தகம் என்பது ஒரு சில துறையில் மட்டுமே இருந்து வந்தது, ஆனால் உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்யா தனது கச்சா எண்ணெய் விநியோகத்தை தள்ளுபடி விலையுடன் உக்ரைன் – ஐரோப்பாவுக்கு கட் செய்துவிட்டு உலக நாடுகளுக்கு திருப்பியது.
இந்தியா உலகின் 2வது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு என்பதால் தள்ளுபடி உடன் கிடைக்கும் கச்சா எண்ணெய்யை அதிகளவில் வாங்கியது. ஆனால் இதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இந்தியாவின் இந்த வர்த்தகம் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் உடன் போர் செய்வதற்கு நிதியுதவி செய்யும் விஷயமாக உள்ளது என குற்றம்சாட்டி வருகிறது.