கடந்த ஆண்டு 500 டாலரிலிருந்து 400 டாலர் (சுமார் ரூ.34,000) வரை மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யலாம் எனக் இரண்டாவது முறையாகக் குறைத்தது.
தற்போது அதையும் குறைத்து, இந்த மாதம் 25-ம் தேதியிலிருந்து 150 டாலர் (சுமார் ரூ.13,000) வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும் எனக் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
இதனால், இந்தியாவில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் வாழ்வாதாரத்துக்குப் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என அஞ்சுகின்றனர்.
இது தொடர்பாக இந்திய அரசின் மாலத்தீவு இந்திய உயர் ஆணையத்திடம் மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்கள் முறையிட்டிருக்கின்றனர்.
என்ன சொன்னது இந்திய ஆணையம்
இந்தியர்களின் முறையீட்டுக்குப் பதிலளித்திருக்கும் வகையில் இந்திய ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்களின் கவனத்திற்கு….
மாலத்தீவில் உள்ள இந்திய ஸ்டேட் வங்கி (SBI), வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் மாதாந்திர உச்ச வரம்பை (Outward Remittance Limit) அக்டோபர் 25, 2025 முதல் 400 அமெரிக்க டாலரிலிருந்து 150 அமெரிக்க டாலராகக் குறைத்திருக்கிறது.