இந்தியா முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை வெகு விமர்சியாக கொண்டாடி வரும் வேளையில் இன்று பங்குச்சந்தை மிகவும் சிறப்பான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது. காலை வர்த்தகம் துவக்கத்தில் இருந்து உயர்வுடன் வர்த்தகம் நடக்கும் வேளையில் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 411.18 புள்ளிகள் உயர்ந்து 84,363.37 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 133.30 புள்ளிகள் உயர்ந்து 25,844.55 புள்ளிகள் அடைந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய வங்களில் ஒன்றாக விளங்கும் சௌத் இந்தியன் பேங்க்-ன் பங்குகள் மக்கள் மத்தியிலான உருவான ஆர்வத்தின் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் 19.32 சதவீதம் உயர்ந்து, 38.40 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

சௌத் இந்தியன் பேங்க்-ன் பங்குகள் சுமார் 37 மாதங்களில் மிகப்பெரிய ஒரு நாள் உயர்வை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் மட்டும் சுமார் 238 மில்லியன் பங்குகள் ரீடைல் முதலீட்டாளர்களால் வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளகு. இது சௌத் இந்தியன் பேங்க்-ன் வாராந்திர சராசரி வர்த்தக அளவான 29 மில்லியன் பங்குகளை விட 8 மடங்கு அதிகமாகும்.
இந்த உயர்வுக்கு முக்கியமான காரணமாக இருந்தது இவ்வங்கியின் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் தான். இன்றைய உயர்வின் மூலம் கடந்த ஒரு மாதத்தில் 30 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது. 2025ஆம் ஆண்டில் சுமா் 50.72 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளதுய. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சௌத் இந்தியன் பேங்க்-ன் பங்கு விலை 31-32 ரூபாய் அளவீட்டை எட்டியிருந்த நிலையில், தற்போது இன்று 38.96 ரூபாய் அளவீட்டை தொட்டு 52 வார உயர்வை பதிவு செய்துள்ளது.
செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை சௌத் இந்தியன் பேங்க் கடந்த வாரம் வெளியிட்டது, இதில் இவ்வங்கி தனது வரலாறு காணாகா உயரிய காலாண்டு நிகர லாப அளவான 351 கோடி ரூபாயை அறிவித்தது, இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 325 கோடி ரூபாயை விட 8 சதவீதம் அதிகமாகும். இதை தொடர்ந்து இவ்வங்கியின் வட்டி இல்லாத வருமான உயர்வு மற்றும் ஒதுக்கீடுகளில் குறிப்பிடத்தக்க குறைவு ஆகியவை லாபத்தை ஆதரித்தன. இந்த காலாண்டு முடிவு ரீடைல் முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்து, பங்கு விலை உயர்வுக்கு வழிவகுத்தது.
சௌத் இந்தியன் பேங்க்-ன் நிகர வட்டி வருமானத்தில் இருக்கும் சவால்கள் இவ்வங்கியின் நிகர வட்டி வருமானம் (என்ஐஐ) 8 சதவீதம் குறைந்து 808 கோடி ரூபாயாக இருந்தது, இருப்பினும் கடன் வளர்ச்சி 10 சதவீதமாக இருந்தது. இதேபோல் நிகர வட்டி மார்ஜின் 3.24 சதவீதத்தில் இருந்து 2.80 சதவீதமாக குறைந்தது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், வங்கியின் நிதி ஆரோக்கியம் மற்றும் முதலீட்டாளர் ஆர்வம் பங்கு உயர்வுக்கு காரணமாக அமைந்தது.
சௌத் இந்தியன் பேங்க்-ன் மொத்த வராக் கடன் விகிதம் (ஜிஎன்பிஏ) 4.40 சதவீதத்தில் இருந்து 2.93 சதவீதமாக மேம்பட்டது, முந்தைய காலாண்டில் 3.15 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முன்னேற்றம், வங்கியின் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்தியது மற்றும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. இந்த காரணிகள், தற்போது சௌத் இந்தியன் பேங்க்யின் பங்கை முதலீட்டுக்கு ஏற்றதாக ஆக்கியுள்ளன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.