இன்றளவில் பெரும்பாலான டிஜிட்டல் சேவைகள் கிளவுட் அமைப்பில் தான் இயங்கி வருகிறது, இப்பிரிவில் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் அமேசான் கொடிக்கட்டி பறக்கும் வேளையில் இதன் சேவையில் ஏற்பட்ட கோளாறு தற்போது உலகளவில் பெரும்பாலான சேவைகள் முடங்கியோ அல்லது பாதித்துள்ளது.
அமேசான் வெப் சர்வீஸ் (AWS) சேவையில் ஏற்பட்ட பழுதால் ஏஐ தளமான பெர்ப்ளெக்சிட்டி, ஃபோர்ட்னைட், ஸ்னாப்சாட் போன்ற பிரபலமான ஆப்களும், பல்வேறு டிஜிட்டல் சேவை தளங்களும் செயலிழந்தன.

அமேசான் வெப் சர்வீஸ்-ஐ நம்பி தான் பல பெரும் நிறுவனங்கள் இயங்கி வரும் வேளையில் இந்த தொழில்நுட்ப கோளாறு உலக அளவில் பல நிறுவனங்களின் இணைப்பை பாதித்தது. கடந்த ஆண்டு க்ரவுட்ஸ்ட்ரைக் பாதிப்புக்கு பிறகு பெரிய இணைய பாதிப்பாக பார்க்கர்படுகிறது. இதிலும் முக்கியமாக இந்த பாதிப்பு அமெரிக்காவின் EAST-1 பகுதியை சார்ந்த சேவைகள் மட்டுமே பாதித்துள்ளது.
AWS சேவையில் ஏற்பட்ட பழுதால் அமேசான்.காம், பிரைம் வீடியோ, அலெக்ஸா, ராப்லாக்ஸ், ராபின்ஹூட், ஸ்னாப்சாட், பெர்ப்ளெக்சிட்டி ஏஐ, வென்மோ, கான்வாஸ், Crunchyroll, வாட்னாட், Rainbow Six Siege, காயின்பேஸ், கான்வா, டூலிங்கோ, குட்ரீட்ஸ், ரிங், தி நியூயார்க் டைம்ஸ், லைஃப்360, ஃபோர்ட்னைட், ஆப்பிள் டிவி, வெரிசான், Chime, மெக்டொனால்ட்ஸ் ஆப், காலேஜ்போர்ட், வோர்ட்ல், PUBG Battlegrounds உள்ளிட்ட பல சேவைகள் பாதிக்கப்பட்டன. இதன் மூலம் உலக அளவில் இருக்கும் வாடிக்கையாளர்களும் இதன் மூலம் பாதிப்பை எதிர்கொண்டனர்.

அமேசான் முதலில் இந்த பிரச்சனையை அக்டோபர் 20 காலை 12:11 மணி PDT அளவில், யூஎஸ்-ஈஸ்ட்-1 பிராந்தியத்தில் பல சேவைகளில் Error விகிதங்கள் அதிகரித்து மற்றும் இணைப்பில் தாமதங்களை விசாரித்து வருவதாக தெரிவித்தது.
அதன் பின் காலை 3:03 மணி அப்டேட்டில் பெரும்பாலான பாதிக்கப்பட்ட சேவைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும், உலக சேவைகள் மற்றும் யூஎஸ்-ஈஸ்ட்-1 சார்ந்த அம்சங்கள் மீண்டும் செயல்படுகின்றன என்றும் கூறியது. முழு தீர்வுக்கு தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் உறுதியளித்தது.
இதைதொடர்ந்து 3.35 மணி அப்டேட்டில் DNS பிரச்சனைகள் முழுமையாக தீர்க்கப்பட்டது, பெரும்பாலான AWS சேவைகள் தற்போது முழுமையாக இயங்க துவங்கியுள்ளது. மேலும் புதிதாக உருவாக இருக்கும் EC2 செய்வதில் தான் பிரச்சனை உள்ளதாக அறிவித்துள்ளது. அடுத்த அப்டேட் 4.15 க்கு அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.