latest

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் என்ன செய்ய வேண்டும்?


தமிழ்நாடு அரசு தகுதியான குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருகிறது. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் தான் இந்த திட்டத்தின் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அந்த குடும்பத் தலைவியின் வங்கி கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது .

மகளிர் உரிமைத் தொகை வேண்டி புதிதாக விண்ணப்பம் செய்ய விரும்பக் கூடிய பெண்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது . ஜூலை மாதம் 15 ஆம் தேதியிலிருந்து நடைபெறக்கூடிய உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக இதுவரை இலட்சக்கணக்கான பெண்கள் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பம் செய்து இருக்கின்றனர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

ஜூலை மாதம் தொடங்கி விண்ணப்பம் செய்த பலருக்கும் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பன உள்ளிட்ட விவரங்கள் இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பத்தில் லட்சக்கணக்கான பெண்களும் ஆழ்ந்து இருக்கின்றனர்.

இத்தகைய சூழலில் தான் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து பேசினார். கடந்த 26 மாதங்களாக அதாவது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு வரை ஒரு கோடியே 14 லட்சம் பேர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என இதுவரை 26 ஆயிரம் ரூபாயை மகளிர் உரிமைத் தொகையாக பெற்றுள்ளனர் என கூறியிருக்கிறார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் முகாம்கள் வாயிலாக பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியான மகளிருக்கு வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார். இதன்படி புதிதாக விண்ணப்பம் செய்த பெண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அவர்களுடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற தகவல் கிடைத்துவிடும் என்பது உறுதியாகிவிட்டது.

Also Read

ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பிக்க முடியுமா?

ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் பெண்களிடையே நீடிக்கிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்த அனைத்து மனுதாரர்களுக்கும் அதிகாரிகள் நேரடியாக வீடுகளை தேடி சென்று கள ஆய்வு மேற்கொண்டு தகவல்களை செயலி வாயிலாக பதிவேற்றம் செய்து வருகிறார்கள். இதன் அடிப்படையில் தான் பயனாளிகளும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தகுதி வாய்ந்த பயனாளிகள் அனைவருக்கும் இந்த திட்டத்தின் பலன் கிடைக்க வேண்டும் என்பதில் அரசு தீர்க்கமாக இருக்கிறது. ஒருவேளை உங்களுடைய மனு நிராகரிக்கப்பட்டு இருந்தால் உங்களுக்கு குறுஞ்செய்தியாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும். குறிப்பாக எந்த காரணத்திற்காக மனு நிராகரிக்கப்பட்டது என்ற விளக்கத்துடன் குறுஞ்செய்தி வரும்.

Recommended For You

நாம் வாங்கும் தங்கம் உண்மையானதா? போலியானதா? போனிலேயே கண்டறிவது எப்படி?

ஒரு வேளை இந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை, அரசு கூறக்கூடிய அனைத்து தகுதிகளும் எனக்கு இருக்கிறது இருந்தாலும் என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டு இருக்கிறது என நீங்கள் நினைத்தால் மனு நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்த நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் நீங்கள் மேல்முறையீடு செய்யக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

இ சேவை மையங்கள் அல்லது உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாகவே சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு நீங்கள் மேல்முறையீடு செய்யலாம் . அவ்வாறு மேல் முறையீடு செய்யப்படும் பட்சத்தில் அதிகாரிகள் மீண்டும் உங்களுடைய விண்ணப்பத்தையும் உங்களுடைய தகுதிகளையும் ஆய்வு செய்து முடிவு எடுப்பார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *