சீனா நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வரவில்லை என்றால் நவம்பர் 1ம் தேதி முதல் கூடுதலாக 100 சதவிகித வரி விதித்து மொத்த வரியை 155 சதவிகிதமாக அதிகரிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
அடுத்த சில வாரங்களில் ட்ரம்ப் – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடக்க உள்ளது. இந்த நிலையில், ட்ரம்பின் இந்த நடவடிக்கைகள் இரு நாட்டின் உறவிலும் விரிசலை உண்டாக்கலாம்.
சீனா ட்ரம்பின் இந்த வரி அச்சுறுத்தல்களுக்கு பணியாது. காரணம், கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா சீனா மீது 145 சதவிகிதம் வரை வரி விதித்தபோது, சீனா எதிர்வினையாக வரி விதித்ததே தவிர, பணியவில்லை.
இதனால், ட்ரம்ப் செயல்கள் மீண்டும் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் போரை உண்டாக்கலாம். இது பிற உலக நாடுகளையும் நிச்சயம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.