செப்டம்பர் காலாண்டில் பரஸ்பர நிதியங்கள் அதாவது மியூச்சுவல் ஃபண்டுகள் சில குறிப்பிட்ட பங்குகளின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளன. இந்த நிறுவனங்களின் மீதான நம்பிக்கையும் நேர்மறையான வருவாய் கண்ணோட்டமும் அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது.
அசாஹி இந்தியா கிளாஸ் லிமிடெட்: அசாஹி இந்தியா கிளாஸ் லிமிடெட் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய வாகன மற்றும் கட்டட கண்ணாடி உற்பத்தி நிறுவனம் ஆகும். இது வாகனம், கட்டுமானம் மற்றும் சூரிய ஆற்றல் போன்ற பல்வேறு துறைகளுக்குச் சேவை செய்கிறது. இந்நிறுவனம் அதன் உயர்தர கண்ணாடிப் பொருட்களுக்குப் பெயர் பெற்றது. புதுமை மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் அதன் ஆதிக்கத்தை விரிவுபடுத்துகிறது.

இந்த நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளின் பங்கு ஜூன் 2025-ல் 1.71% ஆக இருந்தது. செப்டம்பர் 2025-ல் 4.89% ஆக உயர்ந்து, அதாவது 3.18% அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு, நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மீதான மியூச்சுவல் ஃபண்டின் நம்பிக்கையைக் காட்டுகிறது. இதன் தற்போதைய பங்கு மதிப்பு 933 ரூபாய் ஆகும்.
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட்: அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட், எரிசக்தித் துறையில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. மின் உற்பத்தி, மற்றும் விநியோகத்தில் நிபுணத்துவம் பெற்றது. இந்நிறுவனம், சூரிய ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் உட்படத் தூய்மையான எரிசக்தி முயற்சிகளில் கவனம் செலுத்துகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் வலுவான இருப்பைக் கொண்டு, பசுமையான எரிசக்தி தீர்வுகளுக்கான மாற்றத்திற்கு இது வழிவகுக்கும்.
இந்த நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளின் பங்கு ஜூன் 2025-ல் 3.19% ஆக இருந்தது. இது செப்டம்பர் 2025-ல் 6.26% ஆக உயர்ந்து, 3.07% அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு, நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மீதான மியூச்சுவல் ஃபண்டின் நம்பிக்கையைக் காட்டுகிறது. இதன் தற்போதைய பங்கு மதிப்பு 934 ரூபாய் ஆகும்.
ஹேவல்ஸ் இந்தியா லிமிடெட்: ஹேவல்ஸ் இந்தியா லிமிடெட், மின்சாரம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் துறையில் நன்கு அறியப்பட்ட பெயர். மின்விசிறிகள், லைட்டிங் தீர்வுகள், வயரிங் பாகங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை வழங்குகிறது. உயர்தர, ஆற்றல் சேமிப்பு பொருட்கள் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களுக்கு இந்நிறுவனம் அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும், பரந்த விநியோக வலையமைப்பு மூலம் வலுவான சந்தை இருப்பை உருவாக்கியுள்ளது. மேலும், நவீன வாழ்க்கைக்குச் சூழல் நட்பு தீர்வுகளை உருவாக்குவதில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
இந்த நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளின் பங்கு ஜூன் 2025-ல் 5.55% ஆக இருந்தது. இது செப்டம்பர் 2025-ல் 6.42% ஆக உயர்ந்து, 0.87% அதிகரித்துள்ளது. தற்போது இதன் ஒரு பங்கின் மதிப்பு 1485 ரூபாய் ஆகும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.