latest

சபரிமலை ஐய்யப்பன் கோயில்: ஜனாதிபதி ஹெலிகாப்டர் புதைந்த விவகாரம்; கேரள போலீஸ் டி.ஜி.பி கூறுவது என்ன? | Sabarimala Ayyappa Temple: Presidential helicopter buried; What does the Kerala Police DGP have to say?


குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று சபரிமலையில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதற்காக அவர் நேற்று கேரளா வந்தார். இன்று காலை திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பத்தனம்திட்டா கோந்நி பிரமாடம் இண்டோர் ஸ்டேடியத்தைச் சென்றடைந்தார்.

குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி சென்ற நிலையில் ஹெலிகாப்டரின் டயர்கள் ஹெலிப்பேடில் புதைந்தது கண்டறியப்பட்டது. அந்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தள்ளி மீட்டனர்.

இந்தச் சம்பவத்தால் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. முதலில் நிலக்கல்லில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. மழை உள்ளிட்ட காரணங்களால் இடம் மாற்றப்பட்டது.

ஹெலிகாப்டரில் வந்திறங்கிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

ஹெலிகாப்டரில் வந்திறங்கிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

இதுகுறித்து கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி ரவாடா சந்திரசேகர் கூறுகையில், “குடியரசுத் தலைவரின் பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை. குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி ஹெலிபேட் மிகவும் தாமதமாகத்தான் தயார் செய்யப்பட்டது. ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக ஏற்கனவே ஒரு இடம் மார்க் செய்யப்பட்டிருந்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *