latest

Trump: ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா – காரணம் என்ன?|America’s sanction on Russian oil company


“பேச்சுவார்த்தைகள் எதுவும் சரியாக போகவில்லை’ என்று ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடக்கவிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது.

உக்ரைன் - ரஷ்யா போர்

உக்ரைன் – ரஷ்யா போர்

கட்டுப்பாடுகள்…

இந்த நிலையில், நேற்று இரண்டு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான வர்த்தகத் தடைகளை விதித்திருக்கிறது அமெரிக்கா.

இதனால், இந்த நிறுவனங்களிலிருந்து எண்ணெய்‌ வாங்கும் உலக நாடுகளுக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.

ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில், புதின் நேர்மையானவராக இல்லை என்று இதற்குக் காரணமாக அமெரிக்க கருவூல செயலர் ஸ்காட் பெசன்ட் கூறுகிறார்.

இன்னமும் ரஷ்யாவின் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். இப்போது விதிக்கப்பட்டுள்ள தடை மிகப்பெரிய தடை என்றும் கூறுகிறார்.

இந்த எண்ணெய் நிறுவனங்கள் மூலம் ரஷ்யா நடத்தும் போருக்கு நிதி செல்கிறது. இந்தத் தடை மூலம் அந்த நிதிக்கு ஓரளவு நெருக்கடிகளைத் தரலாம் என்று அமெரிக்க தரப்பு கூறுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *