latest

இன்போசிஸ் ரூ.18000 கோடி பைபேக் திட்டம்.. பின்வாங்கிய நாராயணமூர்த்தி, நந்தன் நிலேகனி..!!


இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருந்த ஐடி நிறுவன பங்குகள், இந்த வருடம் மோசமான சரிவை கொடுத்துள்ளது. ஏஐ, ஆட்டோமேஷன், ஹெச்1பி விசா பிரச்சனை, அவுட்சோர்சிங் மீதான அமெரிக்காவின் 25 சதவீத வரி ஆகியவை இத்துறையை மோசமான பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் 2வது பெரிய நிறுவனமான இன்போசிஸ் தனது முதலீட்டாளர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய பைபேக் திட்டத்தை அறிவித்தது. இன்போசிஸ் நிர்வாகம் சந்தையில் இருக்கும் பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தில் இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பங்கு பெறமாட்டார்கள் என அறிவித்துள்ளனர்.

இன்போசிஸ் ரூ.18000 கோடி பைபேக் திட்டம்.. ஜகா வாங்கிய நாராயணமூர்த்தி, நந்தன் நிலேகனி..!!

இன்போசிஸ் செப்டம்பர் 11, 2025 அன்று நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில், 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு பைபேக் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது, நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்போசிஸ் நிர்வாகம் 2017 முதல் இதுவரையில் 3 பைபேக் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

உலக அளவில் ஐடி சேவை துறையில் போட்டி அதிகரித்து வரும் சூழலில், இன்போசிஸ் இந்த நடவடிக்கையால் தனது பங்கு மதிப்பை உயர்த்தி, சந்தையில் இதன் பங்கு மதிப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் 4.15 சதவீதம் வரையில் உயர்ந்து 1533.60 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

இன்போசிஸ் பங்குகள் கடந்த 6 மாதத்தில் 4 சதவீதமும், 2025 ஆம் ஆண்டில் 18.53 சதவீத இழப்பையும் பதிவு செய்துள்ளது.

இன்போசிஸ் நிர்வாகம் இந்த பைபேக் திட்டத்தில், 10 கோடி பங்குகளை சந்தையில் இருந்து வாங்குகிறது. இதில் ஒவ்வொரு பங்கின் முக மதிப்பும் 5 ரூபாய் ஆகும். இந்த பங்குகளை இன்போசிஸ் நிர்வாகம் ஒரு பங்கை 1,800 ரூபாய் வரையிலான தொகைக்கு வாங்கும் என அறிவித்துள்ளது. இது, நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் சுமார் 2.41 சதவீதமாகும்.

இன்போசிஸ் ரூ.18000 கோடி பைபேக் திட்டம்.. ஜகா வாங்கிய நாராயணமூர்த்தி, நந்தன் நிலேகனி..!!

இந்தத் திட்டம், நிறுவனத்தின் நிதி வலிமையை வெளிப்படுத்துவதோடு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். இதுபோன்ற பெரிய அளவிலான பைபேக் திட்டம் நிறுவனத்தின் லாபங்களை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்துகொள்ளும் உத்தியாக பார்க்கப்படுகிறது, இதேபோல் நீண்ட கால முதலீட்டாளர்களை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் ப்ரோமோட்டர்கள் மற்றும் ப்ரோமோட்டர்கள் குழு, இந்த 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான பைபேக் திட்டத்தில் பங்கேற்க விருப்பமில்லை என்று செப்டம்பர் 14, 16, 17, 18 மற்றும் 19 தேதிகளில் அவர்கள் அளித்த கடிதங்களில் அறிவித்துள்ளனர். இன்போசிஸ் ப்ரோமோட்டர்கள் குழு கூட்டாக இந்நிறுவனத்தின் 13.05 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *