அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனங்கள் அனைத்துமே தற்போது ஏஐ பிரிவில் யார் முதலிடத்தை பிடிப்பது என்ற போட்டியில் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றன. கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா ஆகியவை பிரபலமான டெக் நிறுவனங்களாக இருந்தாலும் ஏஐ தொழில்நுட்பத்தை பொருத்தவரை இவை தொடக்கத்திலேயே அதில் கவனம் செலுத்த தவறிவிட்டன.
உலக அளவில் ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இது நீண்ட காலமாக டெக்துரையில் இயங்கி வரக்கூடிய கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எல்லாம் பெரும் பிரச்சனையை உண்டாக்கி தந்திருக்கிறது .தற்போது மக்கள் அதிக அளவில் சாட் ஜிபிடி உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். கூகுள் நிறுவனம் தங்களுக்கு என சொந்தமாக ஜெமினி ஏஐ செயலியை அறிமுகம் செய்தது. இருந்தாலும் ஜெமினி ஏஐ சாட் ஜிபிடி அளவுக்கு மக்களிடம் பிரபலமடையவில்லை.

இந்த சூழலில் தான் சுந்தர் பிச்சை ஏஐ பிரிவில் கூகுளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறார். ஆனால் கூகுளுக்கே ஆப்பு வைக்க கூடிய வகையிலான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது சாட் ஜிபிடி வெளியிட்டுள்ளது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன் வெளியிட்டுள்ள ஒரு எக்ஸ் பதிவை அடுத்து கூகுள் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் சுமார் 13 லட்சம் கோடி ரூபாயை இழக்க வைத்திருக்கிறது.
சாம் ஆல்ட்மேன் சாட் ஜிபிடி அட்லாஸ் என்ற ஏஐ அடிப்படையிலான ஒரு வெப் பிரவுசரை அறிமுகம் செய்திருக்கிறார் . செவ்வாய்க்கிழமை அன்று சாம் ஆல்ட்மேன் வெளியிட்ட சாட் ஜிபிடி அட்லாஸ் தொடர்பான ஒற்றை வரி அறிவிப்பு பங்குச்சந்தையில் மிக பயங்கரமாக எதிரொலித்தது. உடனடியாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் சந்தை மதிப்பில் 150 பில்லியன் டாலர்கள் சரிவடைந்தன. இந்திய ரூபாயின் மதிப்பில் இது சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

உலக அளவில் பிரபலமான வெப் பிரவுசராக தற்போது கூகுள் குரோம் தான் செயல்பட்டு வருகிறது . ஆனால் அதற்கு போட்டியாக தான் சாட் ஜிபிடியின் அட்லாஸை அறிமுகம் செய்திருக்கிறார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியீடு செய்த சில நிமிடங்களிலிருந்து அல்பாபெட்டின் பங்கு மதிப்பு படிப்படியாக சரியத் தொடங்கியது . ஒரு மணி நேரத்திற்குள்ளேயே சுமார் 5% வரை சரிவடைந்து ஒரு பங்கின் விலை 246 டாலர்கள் என வர்த்தகமானது இதன் காரணமாக கூகுளின் சந்தை மதிப்பிலும் 150 பில்லியன் டாலர்கள் குறைந்தன.
கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசருக்கு போட்டியாக தான் சாம் ஆல்ட்மேன் சாட் ஜிபிடி அட்லாஸை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை கூகுள் செய்வது பழக்கம். ஆனால் அது மாறி ஏஐ செயலிகள் மூலம் தகவல்களை பெற்றுக் கொள்கின்றனர். கூகுளில் தேடும்போது நமக்கென தனிப்பயனாக்கப்பட்ட தகவலும் துல்லியமாக நாம் எதிர்பார்க்கக் கூடிய தகவலும் கிடைக்காது . ஆனால் ஏஐ செயலிகளில் நாம் எதிர்பார்க்கக்கூடிய நமக்கு தேவையான தகவல்கள் மட்டும் கிடைக்கும் . இதுதான் தற்போது பலரும் ஏஐ செயலிகளை நோக்கி படையெடுக்க காரணமாக மாறி இருக்கிறது.
இதை பயன்படுத்தி தான் அட்லாஸ்ச் என்ற வெப் பிரவுசரை அறிமுகம் செய்திருக்கிறார் சாம் ஆல்ட்மேன். இது கூகுள் நிறுவனத்தின் குரோமை ஒழித்துக் கட்டக்கூடிய ஒரு திட்டமாக தான் பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு இது மேக் பயனாளர்களுக்கு மட்டும் கொண்டு வரப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.