இந்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது… பதினான்காவது கட்ட பேச்சுவார்த்தை முடிந்தும், இன்னும் அதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இது ஒப்பந்தமானால், இருதரப்பும் ஏற்றுமதி, இறக்குமதிகள் செய்வதில் பெரிய வரிச்சலுகைகள் கிடைக்கும். மேலும், இருதரப்பிற்குமே வர்த்தக ரீதியிலான உறவு நன்கு அமையும்.
ஆனால், பதினான்காவது கட்ட பேச்சுவார்த்தை முடிந்தும் இருதரப்பினருக்கும் இடையே சில வித்தியாசங்கள் இழுபறி நீடித்து வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தை பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் நடந்தது.

இருதரப்பும் தங்களுக்கு தேவையான வரி சலுகைகள், சந்தை அனுமதி, வர்த்தகம் மற்றும் முதலீடு அனுகூலங்களைப் பேசி வருகிறது. இதில் தான் சிக்கல் எழுந்துள்ளது.
ஆட்டோமொபைல், விவசாயம், வைன் போன்றவற்றிற்கு இந்திய சந்தை அனுமதியை நாடுகிறது ஐரோப்பிய ஒன்றியம். ஆனால், இவை இந்தியா பெரும்பாலும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துறைகள் ஆகும். இவைகளுக்கு தனி கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
அடுத்ததாக, முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை வரையறைகள். இந்த இரண்டிலும் ஒரு முடிவை எட்ட முடியாத சூழல் நீடித்து வருகிறது.