5 ஆண்டுகளில் ரூ.31 கோடி சேர்த்தது எப்படி? மும்பையை சேர்ந்த பொறியாளர் பகிரும் ரகசியம்!!


தற்போது வேலைக்கு செல்லக்கூடிய பலருக்கும் தங்களுடைய சம்பளத்தில் ஒரு கணிசமான தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது. சரியான முறையில் திட்டமிட்டு நம்முடைய பணத்தை முதலீடு செய்தால் எதிர்காலத்தில் எந்தவித நிதி சிக்கலும் இல்லாமல் வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கை இளைஞர்கள் மத்தியில் காணப்படுகிறது .

அப்படி 38 வயதான ஒரு நபர் 5 ஆண்டுகளில் 31 கோடி ரூபாயை சேர்த்து இருக்கிறார். பட்டய கணக்காளராக இருக்கக்கூடிய நிதின் கவுசிக் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தனிப்பட்ட நிதி மேலாண்மை குறித்து முதலீடு குறித்தும் தொடர்ச்சியாக பதிவு செய்து வருபவர் . அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் சொத்து சேர்ப்பது என்பது வெறும் அதிர்ஷ்டத்தால் நிகழ்ந்து விடாது அது அதற்கு நிதி சார்ந்த ஒழுக்கம் வேண்டும் எனக் கூறுகிறார் .

5 ஆண்டுகளில் ரூ.31 கோடி சேர்த்தது எப்படி? மும்பையை சேர்ந்த பொறியாளர் பகிரும் ரகசியம்!!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 38 வயதான ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் 8 கோடி ரூபாய்க்கு சொத்து வைத்திருந்தார், ஆனால் இப்போது அவரிடம் அது 31 கோடி ரூபாயாக வளர்ந்திருக்கிறது என கூறியுள்ளார். இதற்காக அவர் எந்த ஒரு குறுக்கு வழியையும் பின்பற்றவில்லை , டிரேடிங்கில் ஈடுபடவில்லை , ஸ்மார்ட்டான முறையில் முதலீடு செய்தது ஒழுக்கமாக அந்த முதலீட்டை பின்பற்றியது ஆகிய இரண்டும் தான் அவருடைய சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 31 கோடி ரூபாயாக உயர்வதற்கு காரணம் எனக் கூறியிருக்கிறார் .

A story that perfectly explains why wealth creation is more about discipline than luck !!

Five years ago, I started working with one of my best clients — a 38-year-old software engineer from Mumbai.
At that time, his net worth was around ₹8 crores.

Fast forward to today —… pic.twitter.com/vLFJ0BJOb8

— CA Nitin Kaushik (FCA) | LLB (@Finance_Bareek) October 21, 2025 “>

அந்த பொறியாளர் தன்னுடைய வருமானத்தில் கணிசமான தொகையை பிரித்து மியூச்சுவல் ஃபண்டு மற்றும் தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட் என பரவலாக முதலீடு செய்துள்ளார். முதலில் ஈக்விட்டியில் ஸ்மால் கேப், மிட் கேப் மற்றும் லார்ஜ் கேப் என சமமான போர்ட்போலியோ கொண்ட மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தாராம். 5 ஆண்டுகளில் அவரது மியூச்சுவல் ஃபண்டு போர்ட்போலியோ ஆண்டுக்கு 18.7% வளர்ச்சியை அடைந்துள்ளது.

Also Read

இந்த தீபாவளியை விடுங்க அடுத்த தீபாவளிக்கு குறைந்த விலைக்கு தங்கம் வாங்க இந்த டிரிக் போதும்!!

அடுத்ததாக தங்கம் , வெள்ளி உள்ளிட்ட உலோகங்களில் முதலீடு செய்தாராம். இந்த ஆண்டு தங்கமும் வெள்ளியும் பல மடங்கு மதிப்பு உயர்ந்து அவருக்கு பெரிய லாபத்தை இட்டி தந்திருக்கிறது . அவர் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவில்லை அதற்கு மாற்றாக நிலம் வாங்கினார். 20 மாதங்களிலேயே அதன் மதிப்பு 25 சதவீதம் உயர்ந்தது என சுட்டிக்காட்டி இருக்கிறார்.

Recommended For You

இந்தி சீரியலில் பிரபல பெரும் பணக்காரர் பில்கேட்ஸ்!! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி இருந்தால் அவர் வங்கியில் கடன் வாங்கி ஈஎம்ஐ செலுத்த வேண்டி இருக்கும், ஆனால் அவர் அதில் இருந்து தப்பிவிட்டார் என கூறியுள்ளார். மேலும் சரியான முறையில் திட்டமிட்டு வருமான வரிகளை சேமித்தாராம். இப்படி அவருடைய 8 கோடி ரூபாய் சொத்து 5 ஆண்டுகளிலேயே காம்பவுண்டிங், சிறந்த திட்டமிடல், நிதி சார்ந்த ஒழுக்கம் வரி திட்டமிடல் ஆகியவற்றின் உதவியால் 31 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என கூறியுள்ளார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *