தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று திடீரென சரிவை சந்தித்தன. இந்தியப் பங்குச் சந்தைகள் காலை லேசான சரிவை சந்தித்து பின்னர் ஏற தொடங்கின. இருந்தாலும் நண்பகலில் நாளின் உச்ச நிலையிலிருந்து சரிந்து, குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்தித்தன.
சென்செக்ஸ் குறியீடு தனது இன்றைய நாளின் உச்ச நிலையிலிருந்து 800 புள்ளிகள் குறைந்து 84,556.40 ஆகவும், நிஃப்டி 25,888.90 ஆகவும் சரிந்தது. இதற்கு முக்கியமாக நான்கு காரணங்கள் கூறப்படுகின்றன. சந்தைகள் புதிய உச்சங்களை எட்டிய பிறகு, முதலீட்டாளர்கள் லாபத்தை எடுக்க முற்பட்டனர். இது முக்கியக் குறியீடுகளில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது.

பெஞ்ச்மார்க் பேங்க் நிஃப்டி குறியீடும், இன்று முன்னதாக 58,577 என்ற சாதனையை எட்டிய பின்னர், 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 58,161 ஆக வர்த்தகமானது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளின் உயர்வு முதலீட்டாளர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.உலகளாவிய எண்ணெய் அளவுகோலான ப்ரென்ட் கச்சா எண்ணெய் 2.56 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 64.19 அமெரிக்க டாலராக உயர்ந்தது. இது இந்திய சந்தைகளில் முதலீட்டாளர்களின் உணர்வுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
சர்வதேச சந்தைகளின் கலவையான செயல்பாடுகளும் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்தன. பெரும்பாலான ஆசியச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாயின. ஜப்பானின் நிக்கேய் 225, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் மற்றும் ஹாங்காங்கின் ஹாங்செங் குறியீடுகள் சிவப்பு நிறத்தில் இருந்தன.
அமெரிக்க சந்தைகள் இரவு முடிவில் எதிர்மறையாக முடிவடைந்ததும், உள்நாட்டு வர்த்தகத்தில் எச்சரிக்கையான தொனியை அதிகரித்தது. மேலும், இந்திய வோலட்டிலிட்டி இண்டெக்ஸ் (VIX) 3.3% உயர்ந்து 11.73 ஆக இருந்தது.
மாஸ்டர் டிரஸ்ட் குரூப்பின் இயக்குனர் புனீத் சிங்காணியா, நிஃப்டிக்கு 25,400-25,500 என்ற வரம்பு ஒரு முக்கியமான ஆதரவு மண்டலமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். இது நேர்மறையான சந்தை உணர்வு மற்றும் வலுவான முதலீடுகளுக்கு மத்தியில் நிலையான வளர்ச்சிக்கு உறுதியான அடிப்படையை வழங்கும் என்றார்.
அதிக VIX குறிகாட்டிகள், சந்தை வர்த்தகர்களிடையே குறுகிய கால நிச்சயமற்ற தன்மையைக் குறிக்கின்றன. இந்த காரணிகள் அனைத்தும் இணைந்து இந்திய பங்குச் சந்தைகளில் ஒரு சரிவுக்கு வழிவகுத்தன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.