மழை என்றாலே ஏன் அச்சம் ஏற்படுகிறது? வெள்ளப்பெருக்கை தடுக்கவே முடியாதா? இதுக்கு விடிவுகாலம் தான் என்ன?


சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது . இனி அடுத்த இரண்டு மாதங்களுக்கு வங்கக்கடலில் புயல் உருவாக்கம், கனமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட செய்திகளை தான் நாம் அதிகமாக காண முடியும். இரண்டு நாள் மழைக்கே பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

பருவமழை: பருவமழை காலம் என்றால் மழை பெய்வது வழக்கம் தான் ஆனாலும் மழை என்ற வார்த்தையே நமக்கு ஏன் அச்சத்தை தருகிறது. மழை என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சாலைகளில் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர், மழையால் வீடு, வாகனங்கள், பயிர்கள் சேதமடைவது. நிலச்சரிவுகள் உயிரிழப்புகள், வீடுகள் மூழ்குவது என எதிர்மறையானவை தோன்றுகின்றன.

மழை என்றாலே ஏன் அச்சம் ஏற்படுகிறது? வெள்ளப்பெருக்கை தடுக்கவே முடியாதா? இதுக்கு விடிவுகாலம் என்ன?

ஏன் மழை என்றாலே அச்சம்: ஏனெனில் இந்த பாதிப்புகளில் எல்லாம் நேரடியாக பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் தான். மழை, வெள்ளம், புயல் , சூறாவளி காற்று ஆகியவற்றில் நம் வீடுகளும் உடைமைகளும் சேதமடைகின்றன, அடித்து செல்லப்படுகின்றன, வாகனங்கள் சேதமடைகின்றன என வைத்து கொள்வோம். அவற்றுக்காக நமக்கு என்ன இழப்பீடு கிடைக்கிறது. மத்திய , மாநில அரசுகள் நிவாரணம் வழங்கும், ஆனால் அவை நாம் இழந்தவைகளுக்கு ஈடாகுமா? அப்படி இழப்பீடு கிடைத்தாலும் உடனே அதே நாளில் கிடைக்காது அதிகாரிகள் ஆய்வு செய்து பணம் கைக்கு வர பல நாட்கள் ஆகும்.

இந்தியாவில் பாதிப்பு என்ன: பருவநிலை மாற்றம் புவி வெப்பமயமாதல் ஆகியவற்றின் எதிரொலி தான் அடிக்கடி ஏற்படக்கூடிய புயல்கள், மழை வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை . தீவிரமான மற்றும் மோசமான வானிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1993 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 400 தீவிர வானிலை நிகழ்வுகளை சந்தித்து இருக்கிறோம். இதன் மூலம் 80 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன 180 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பணத்தை இழந்திருக்கிறோம் .

Also Read

5 ஆண்டுகளில் ரூ.31 கோடி சேர்த்தது எப்படி? மும்பையை சேர்ந்த பொறியாளர் பகிரும் ரகசியம்!!

சேதங்களுக்கு யார் பொறுப்பு: தமிழ்நாடு , பஞ்சாப், உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இந்த தீவிர வானிலை நிகழ்வுகளால் வேளாண் பொருட்கள் இழப்பு, மக்களின் உடைமைகள் சேதம் , பாலங்கள் சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகள் சேதம் உள்ளிட்டவற்றை காண்கின்றன.

காப்பீடு திட்டம்: இத்தகைய சூழலில் தான் மத்திய அரசு பருவ நிலை மாற்றத்துடன் இணைக்கப்பட்ட காப்பீடு திட்டங்களை தேசிய அளவில் நடைமுறைக்கு கொண்டுவர முடியுமா என்பதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்யத் தொடங்கி இருக்கிறது. பருவநிலை மாற்றம் காரணமாக திடீரென புயல்கள் உருவாவது, மேகவெடிப்பால் மழை பொழிவது, வெள்ளப்பெருக்கு ஏற்படுவது, வீடுகள் அடித்து செல்லப்படுவது உள்ளிட்டவை நாடு முழுவதும் நாம் அடிக்கடி கேட்கப்படக்கூடிய விஷயங்களாக மாறி இருக்கின்றன.

ஆய்வு நடத்த உத்தரவு: மத்திய அரசு காப்பீடு வழங்கக்கூடிய நிறுவனங்களிடம் இதுபோன்ற பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு காப்பீடு வழங்க முடியுமா என்பது தொடர்பான ஆய்வினை நடத்தக் கூறி இருக்கிறது . சமகாலத்தில் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான ஒரு காப்பீடாக இவை பார்க்கப்படுகின்றன .

மழை என்றாலே ஏன் அச்சம் ஏற்படுகிறது? வெள்ளப்பெருக்கை தடுக்கவே முடியாதா? இதுக்கு விடிவுகாலம் என்ன?

காலநிலை காப்பீடு என்றால் என்ன: முதலில் கிளைமேட் இன்சூரன்ஸ் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம். காலநிலை ஆபத்து காப்பீடு என இது அழைக்கப்படுகிறது. வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைகள் , புயல்கள் மற்றும் சூறாவளி போன்ற காலநிலை மாற்றத்தோடு தொடர்புடைய தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படக்கூடிய நிதி இழப்புகளிலிருந்து தனிநபர்கள் மற்றும் வணிகங்களை பாதுகாக்க வடிவமைக்கப்படும் காப்பீடு திட்டங்கள் ஆகும்.

எப்படி செயல்படும்: இது பாராமெட்ரிக் காப்பீட்டு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. இதன்படி கனமழை , அதிக வெப்ப நிலை அல்லது பலத்த சூறாவளி காற்று போன்று குறிப்பிட்ட வானிலை நிலைமைகள் ஏற்படும் போது தானாகவே காப்பீடு பெற்ற மக்களின் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு விடும் . இந்த காப்பீட்டு முறையில் நாம் கிளைம் விண்ணப்பம் செய்ய தேவையில்லை. இயற்கை இடர்கள் ஏற்பட்ட உடனேயே பணம் அக்கவுண்டிற்கு வந்துவிடும்.

Recommended For You

இதுக்கு பேர் தான் கூரையை பிச்சுகிட்டு கொட்டுறதா!! தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு வந்த குட்நியூஸ்!!

ஏற்கனவே சோதனை: மத்திய அரசு தற்போது இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வினை தொடங்கி இருக்கிறது. சில மாநிலங்களில் ஏற்கனவே இதே போன்ற ஒரு பாராமெட்ரில் காப்பீடு திட்டங்கள் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ராஜஸ்தான், குஜராத் , மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை கடந்த போது குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு சிறிய அளவிலான தொகை வங்கிகளில் வரவு வைக்கப்பட்டது.

எந்த நாட்டில் அமலில் உள்ளது: முதன் முதலாக ஃபிஜி நாடு தான் இது போன்ற ஒரு காப்பீடை கொண்டு வந்தது. அங்கு அடிக்கடி சூறாவளி ஏற்பட்டதால் சூறாவளிகளுக்கு எதிரான காப்பீடு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்தியா இந்த காலநிலை காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் உலகிற்கே முன் உதாரணமாக இந்தியா மாறும் என சொல்லப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *