[ad_1]
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்திருக்கிறது. தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக குறைந்து வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமான அளவு விலை குறைந்திருக்கின்றன.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று ஒரு கிராம் 11,450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு 150 ரூபாய் விலை குறைந்து 11,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை 91,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அது 90,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து கிட்டத்தட்ட 7000 ரூபாய்க்கு மேல் சரிவடைந்து இருக்கிறது . 10 கிராம் தங்கத்தை பொருத்தவரை 1,13,000ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கமும் இன்று விலை குறைந்திருக்கிறது . கிராமுக்கு 163 ரூபாய் விலை சரிந்து 12,328 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1304 ரூபாய் விலை குறைந்து 98,624 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து 9,450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது ஒரு சவரனுக்கு 1000 ரூபாய் விலை குறைந்து 75 , 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 21ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து சரிவிலேயே இருந்து வருகிறது. கடந்த 17ஆம் தேதி அன்று 12,200 ரூபாய் என ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதாவது ஒரு சவரன் 97, 600 ரூபாய் என்ற நிலையை எட்டியது.
இதனை எடுத்து படிப்படியாக குறைந்து வந்த தங்கம் இன்றைய தினம் ஒரு சவரன் 90,400 ரூபாய் என 7200 ரூபாய் வரை விலை குறைந்திருக்கிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வருவது மிடில் கிளாஸ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது. தங்கம் விலை இப்படியே 90,000க்கும் கீழ் வர வேண்டும் என பலரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
வெள்ளியின் விலை கணிசமாக குறைந்திருக்கிறது. இன்று ஒரே நாளில் வெள்ளி ஒரு கிராமுக்கு ஐந்து ரூபாய் விலை குறைந்து 165 ரூபாய்க்கு விற்கப்படுகிறது ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை குறைந்து 1, 65,000 ரூபாய் என்ற அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 15ஆம் தேதி வெள்ளி ஒரு கிராமுக்கு 207 ரூபாய் என விலை உயர்ந்திருந்த நிலையில் இன்றைய தினம் அது 165 என குறைந்திருக்கிறது . அதாவது ஒரு கிராமுக்கு 42 ரூபாயும் ஒரு கிலோவிற்கு 42 ஆயிரம் ரூபாயும் விலை குறைவு கண்டிருக்கிறது.
[ad_2]


